பத்தாங் மலாக்கா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பத்தாங் மலாக்கா என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். சீன மொழியில் 巴登马六甲 என்று அழைக்கிறார்கள். இந்த நகரம் ஜாசின், தம்பின் ஆகிய இரு மாவட்டங்களுக்கு மத்தியில் இருக்கின்றது. பத்தாங் மலாக்கா நகரின் ஒரு பகுதி மலாக்கா மாநிலத்திலும், இன்னொரு பகுதி நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் உள்ளது.

இந்த நகரத்தில் ஒரு தொடர்வண்டி நிலையமும் உள்ளது. இங்கு கம்போங் உலு, கம்போங் ஹிலிர், கம்போங் தெங்கா, பத்தாங் மலாக்கா பாரு, கம்போங் ஓன் லோக் போன்ற கிராம, வீடமைப்பு பகுதிகள் உள்ளன. பத்தாங் மலாக்காவில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என மூவினத்தவரும், அவர்களுடன் இணைந்து மலேசியப் பூர்வீகக் குடிமக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலோர் ரப்பர் மரம் சீவுதல், விவசாயம் செய்தல், சிறு வியாபாரங்கள் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பகுதியினர் தனியார் நிறுவனங்களிலும் அரசு சேவைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நகரம் கெமிஞ்சே, தம்பின் ஆகிய நகரங்களுடன் போக்குவரத்து இணைப்புகளைக் கொண்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads