பத்மசா நாயுடு

இந்திய விடுதலைப் போராட்டத் தெலுங்கர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பத்மசா நாயுடு( Padmaja Naidu 1900-2 மே 1975) என்பவர் இந்தியத் தேசியக் காங்கிரசின் பிரமுகரும் சரோசினி நாயுடுவின் மகளும் ஆவார். தமது 21 ஆம் அகவையில் இந்தியத் தேசியு காங்கிரசில் சேர்ந்த பத்மசா 1920 இல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.[1]

பதவிகள்

இந்தியா விடுதலை  அடைந்த பின்னர் மேற்கு வங்க ஆளுநராக அமர்த்தப்பட்டார். 1956 முதல் 1967 வரை இப்பதவியில் இருந்தார். சவகர்லால் நேருவுடன் அன்புடனும் நெருக்கமாகவும் இருந்தார். செஞ்சிலுவைச் சங்க இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.  வங்க தேசப் போரின்போது போர் அகதிகளுக்கு இவர் தலைமையில் செஞ்சிலுவை சங்கம்  உதவிகள் செய்தது.

பாரத் சேவக் சமாஜ்,  அனைத்திந்திய கைவினைப்பொருள்கள் போர்டு, மற்றும் நேரு நினைவு நிதி போன்ற அமைப்புகளில் பொறுப்பு வகித்திருந்தார். 

Remove ads

நினைவு கூர்தலும் விருதும்

டார்சிலிங்கில் உள்ள இமாலய விலங்கியல் பூங்காவுக்கு இவரது நினைவைப் போற்றும் வகையில் இவருடைய பெயரைச் சூட்டியுள்ளார்கள்.  1962 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.

சான்றாவணம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads