பன்னாட்டு இந்தியத் திரைப்படக் கலைக்கழக விருதுகள்

From Wikipedia, the free encyclopedia

பன்னாட்டு இந்தியத் திரைப்படக் கலைக்கழக விருதுகள்
Remove ads

ஐ.ஐ.எஃப்.ஏ (IIFA) என்று பிரபலமாக அழைக்கப்படும் பன்னாட்டு இந்தியத் திரைப்படக் கலைக்கழக விருதுகள் (International Indian Film Academy Awards) என்பது இந்தித் திரைப்படத்திற்காக ஆண்டுதோறும் விருது வழங்கும் விழாவாகும். விஸ்கிராஃப்ட் இன்டர்நேஷனல் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (Wizcraft International Entertainment Private Limited) தயாரித்த இந்த விருதுகளின் வெற்றியாளர்கள் இரசிகர்களால் தீர்மானிக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்திய இந்தித் திரைப்படத் துறையைச் சேர்ந்த தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு இணையவழி நிகழ்நிலை (Online) வாயிலாக வாக்களிக்கிறார்கள். 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.

விரைவான உண்மைகள் பன்னாட்டு இந்தியத் திரைப்படக் கலைக்கழக விருதுகள், நாடு ...

ஐ.ஐ.எஃப்.ஏ திருவிழா (IIFA Utsavam) என்பது வருடாந்திர ஐ.ஐ.எஃப்.ஏ விருதுகளின் தென்னிந்திய பிரிவாகும். 2015 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களை மையமாக வைத்து 2016 இல் விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதல் ஐ.ஐ.எஃப்.ஏ திருவிழா இந்தியாவின் ஹைதராபாத் உள்ள காந்தி மோகன சந்திர பாலயோகி தடகள அரங்கத்தில் 24 மற்றும் 25 ஜனவரி 2016 அன்று நடைபெற்றது.[1]

முதன்முறையாக விருதுகள் 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் லண்டனில் உள்ள தி மில்லினியம் டோமில் வழங்கப்பட்டன. அதன் பிறகு, இந்தித் திரைப்படத்தின் பன்னாட்டு வெற்றியைக் குறிக்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள இடங்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2000 ஆம் ஆண்டு முதல், இந்த நிகழ்வு ஒரு இரவு நிகழ்விலிருந்து மூன்று நாள் கொண்டாட்டமாக விரிவடைந்து, இந்திய திரைப்படத் துறை தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்துகிறது.[2]

இந்த விருதுகள் முந்தைய ஆண்டின் படங்களை பெருமைப்படுத்துகின்றன. சல்மான் கான் 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து ஐ. ஐ. எஃப். ஏ-வின் விளம்பரத் தூதராக இருந்து வருகிறார், ஐந்து சிறப்பு விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தசாப்தத்தின் நட்சத்திரம் (ஆண் மற்றும் பெண்) (Star of the Decade (Male and Female), தசாப்தத்தின் இயக்குநர் (Director of the Decade), தசாப்தத்தின் திரைப்படம் (Movie of the Decade) , தசாப்தத்தின் இசை {Music of the Decade) மற்றும் தசாப்தத்தின் இயக்குநர் (Director of the Decade) ஆகியனவாகும்.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads