பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி (International Phonetic Alphabet) உலகில் பேசப்படும் மொழிகளின் பலுக்கல்களை (ஒலிப்புகளை) ஒரு சீர் முறையின்கீழ் எழுதுவதற்காக இலத்தீன் அரிச்சுவடியை மையமாகக் கொண்டு பன்னாட்டு ஒலிப்பியல் குழுமத்தால் ஆக்கப்பட்ட முறைமை ஆகும்.[1] பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி அந்நிய மொழி கற்கும் மாணவர்கள், அதை கற்பிக்கும் ஆசிரியர்கள், மொழியியலாளர்கள், பேச்சுப் பயிற்சி அளிப்பவர்கள், பாடகர்கள், நடிகர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகரமுதலி ஆக்கர்கள் போன்றோரால் பயன்படுத்தப்படுகிறது.[2][3]

பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி, பேசும் போது சொல் ஒலிப்பில் தோன்றும் ஏற்ற இறக்கம், நிறுத்தலிடங்கள் போன்ற மாற்றங்களை காட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[1] பேசும் போது இருக்கவேண்டிய பற்களின் நிலை, நாவின் நிலை போன்றவற்றைக் குறிக்க பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி நீட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.[2]
2007 ஆண்டின்படி 107 எழுத்துக்களும் 56 குறியீடுகளும் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியில் காணப்படுகின்றன. எழுத்துக்களின் இணைப்போ அல்லது நீக்கமோ பன்னாட்டு ஒலிப்பியல் குழுமத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
