பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு அல்லது பயிரிடப்படும் தாவரங்களுக்கான குறியீடு என்பது முதன்மையாக அனைத்துலகிலும் உள்ள மனிதர்களின் செயற்பாட்டினால் தோன்றிய அல்லது தெரிவு செயல்முறையால் பெறப்பட்ட தாவரங்களின் பெயரிடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள முறைமையை வெளியிடும் ஒரு பதிப்பாகும். இது தோட்டக்கலை அறிவியலின் அனைத்துலக சமூகம் (ISHS - International Society for Horticultural Science)[1] என்ற அமைப்பினால் வெளியிடப்படுகின்றது[2]. இந்த அமைப்பினால் தெரிவு செய்யப்படும் ஒரு ஆணைக்குழுவே (Commission), பெயரிடல் (Nomenclature), பயிரிடும்வகை பதிவு செய்தல் (Cultivar Registration) போன்ற செயல்பாடுகளைச் செய்யும் அனைத்துலக பயிரிடும்வகை பதிவுசெய்யும் ஆணையங்கள் (ICRAs - International Cultivar Registration Authorities) எனப்படும் அமைப்புக்களை உலகின் பல பகுதிகளிலும்[3] நியமித்து, கண்காணித்து வரும்.

Remove ads

வரலாறு

முதன்முதலாக 1953 ஆம் ஆண்டு பயிரிடப்படும் தாவரங்களுக்கான குறியீடு என்ற பெயரில் Wageningen இல் முதலாம் பதிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1958 (Utrecht), 1961 (1958 பதிப்பு இற்றைப்படுத்தப்பட்டது), 1969 (Edinburgh), 1980 (Seattle), 1995 (Edinburgh), 2004 (Toronto), and 2009 (Wageningen) என ஏழு பதிப்புகள் வெளியிடப்பட்டன[4].

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads