பரத்வாஜ்
இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரத்வாஜ் தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
Remove ads
வாழ்க்கை வரலாறு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் தில்லியில் பயின்றார்.[2] இவரது தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார்.[2]இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, மற்றும் மேற்கத்திய இசைகளை இவர் முறைப்படி தில்லியில் கற்றவர்.[2] பரத்வாஜ் இசையமைக்க வரும் முன்பாகவே அவர் சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்கறிஞர் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]
திருக்குறளுக்கு இசை
திருவள்ளுவரின் உலக பொதுமறையான 1330 திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கியுள்ளார்.[3]
பாடல்கள்
சரணுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்
- 1998 காதல் மன்னன் - உன்னை பார்த்த பின்பு நான்
- 1999 அமர்க்களம் - மகாகணபதி, சத்தமில்லாத தனிமை கேட்டேன்
- 2000 பார்த்தேன் ரசித்தேன் - பார்த்தேன் பார்த்தேன், கிடைக்கல கிடைக்கல
- 2002 ஜெமினி - ஓ! போடு.. ஓ! போடு
- 2003 ஜே ஜே - ஜீ பூம்பா, நீ சூரியனை சுட்டுவிடும்
- 2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - சீனா தானா டோய்
- 2004 அட்டகாசம் - அட்டகாசம், 'தெக்கு சீமையில, தல போல வருமா
- 2009 அசல் - ஏ துஷ்யந்தா, தெட்டொடேய்ங்
மற்ற இயக்குநர்களுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்
- அனைத்து பாடல்களும் - பாண்டவர் பூமி
- ஆப்பிள் பெண்ணே - ரோஜாக்கூட்டம்
- ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராப்
இசையமைத்த திரைப்படங்கள்
காதல் மன்னன் திரைப்படத்தில் அறிமுகமான பரத்வாஜ் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த அட்டகாசம் இவரது 25-வது திரைப்படமாகவும் இயக்குநர் சரணின் இயக்கத்தில் வெளிவந்த அசல் திரைப்படம் இவரது 50-வது திரைப்படமாகவும் அமைந்தது.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads