பருந்து கடற்படை வானூர்தி தளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பருந்து கடற்படை வானூர்தி தளம் (INS Parundu) என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், சேர்வைகாரன் ஊரணி ஊருக்கருகே அமைந்துள்ள ஒரு இந்திய கடற்படை விமான நிலையம் ஆகும்.[1] இது இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்படுகிறது.[2][3]
Remove ads
வரலாறு
இராமநாதபுரம் மாவட்டத்தில் இதற்கு முன்னர் பொதுப் பயன்பாட்டில் இருந்த வானூர்தி நிலையமாகும். பின்னர் இது கைவிடப்பட்ட நிலையில், இலங்கையில் ஈழப்போர் தொடங்கிய நிலையில் பாக்கு நீரிணையைக் கண்காணிக்க இந்தியக் கடற்படையின் வசதிக்காக இங்கு உரிய வசதிகள் 1982 இல் ஏற்படுத்தப்பட்டன.
இங்கு முழுமையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு 1985 சூன் 9 ஆம் தேதி கடற்படை வசம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. துவக்கத்தில் ஐஎன்எஸ் ராஜாளி இரண்டு என அழைக்கப்பட்டது.
2009 மார்ச்சு 26 இல், இதன் பெயர் மாற்றப்பட்டு, பருந்து என்னும் தமிழ்ச் சொல்லை இணைத்து ஐஎன்எஸ் பருந்து என பெயர்மாற்றப்பட்டது. இதில் உள்ள வசதிகள் பெரிய விமானங்களை இயக்குவதற்கு ஏதுவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய கடற்படையால் தென்கிழக்கு வங்காள விரிகுடா, வட இந்தியப் பெருங்கடல், மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகிய பகுதிகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
Remove ads
அலகுகள்
ஐஎன்எஸ் பருந்தின் முதன்மை அலகுகள் அடிப்படையில் கடற்படை விமான படைப்பிரிவுகளின் (INAS) எச்ஏஎல் சேடக் உலங்கு, ஐலாண்டர், டோரின்னர் டோ 228 உளவுபார்க்கும் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஓடுபாதை மேம்படுத்தப்பட்டு, இந்த கடற்படை விமான நிலையத்தில் இருந்து வானூர்திகள் வலம்வரவும் செயல்படவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.[1][4] இங்கு INAS 344, IAi ஹெரான், IAI சேர்ச்சர், Mk II ஆகியவகை வானூர்திகள் வலம்வரவும் இயக்கவும் ஐஎன்எஸ் பருந்துவில் நிலைத்திருக்கின்றன.[5][6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads