பர்பரதேசம்

From Wikipedia, the free encyclopedia

பர்பரதேசம்
Remove ads

பர்பரதேசம் காந்தாரதேசத்திற்கு நேர்தெற்கிலும்,சிந்துநதியின் மேற்குக் கரையில் சதுரமான சமமான பூமியாய் பரவி இருந்த தேசம்.[1]

Thumb

இருப்பிடம்

இந்த தேசத்தின் பெரும்பாகங்களில் சமவெளி இல்லாமலும், சற்று உயர்ந்தும், கிழக்குமுகமாய் கொஞ்சம் தாழ்ந்தும், ஆழமான நீரோடைகளும் இந்தத் தேசத்தின் எல்லையாக ஓடும் சிந்துநதியின் அருகில் சரிவாகவும்,சுண்ணாம்புக்கல் நிறைந்த பூமியே அதிகமாக இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்

இந்த தேசத்திற்கு வடக்கில் பாரியாத்ர பெரியமலையின் வடக்கு தொடர்பாகமும், மகாமலையின் தெற்கு தொடர்ச்சி கிளைமலையும், இந்த இரு மலைகளும் தெற்கு வடக்கில் நீண்டு விந்திய மலை அடிவாரத்தோடு இணைந்து உள்ளது. இத்தேசத்தின் காடுகளில் நீலக்குரங்கு, வெண்குரங்கு, சிவிங்கிப்புலி, செந்நாய் முதலிய காட்டு விலங்குகளும், காட்டு ஆடுகளும் அதிகம் உண்டு.

நதிகள்

இந்த பர்பரதேசத்திற்கு சிந்துநதி வடக்கிலிருந்து தெற்குமுகமாய் ஓடி இந்த தேசத்தை செழிக்க வைத்து மேற்குமுகமாய் ஓடி, பிறகு காசுமீரதேசத்தின் வடகிழக்கில் இறங்கி, காந்தாரதேசத்தின் கிழக்கு பூமியில் ஓடி மேற்கு கடலில் இணைகிறது.

விளைபொருள்

இந்த தேசத்தில் தேக்கு, பலா, பிரம்பு, திந்துகம், பூர்சரம் முதலியன அதிகமாய் விளைகிறது.

கருவி நூல்

சான்றடைவு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads