பலூச்சி மொழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பலூச்சி மொழி ஒரு வடமேற்கு ஈரானிய மொழியாகும். மேற்குப் பாகிஸ்தான், கிழக்கு ஈரான் மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் உள்ள பலூச்சிஸ்தானின் பலூச் பகுதியின் முதன்மை மொழி இதுவாகும். இது சில பிராகுயிக்களால் இரண்டாம் மொழியாகவும் பேசப்படுகிறது. இது பாகிஸ்தானின் ஒன்பது உத்தியோக மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.[1][2][3]
Remove ads
கிளைமொழிகள்
பலூச்சி மொழிக்குப் பல கிளைமொழிகள் உள்ளன. எத்னோலாக் மூன்று கிளைமொழிகளாக, கிழக்குப் பலூச்சி, மேற்குப் பலூச்சி, தெற்குப் பலூச்சி என்னும் மூன்றையும் குறித்துள்ளது. ஈரானிக்கா கலைக்களஞ்சியம் ஆறு கிளைமொழிகளைப் பட்டியலிட்டுள்ளது. இவை, ரக்ஷானி, சரவானி, லக்ஷாரி, கேச்சி, கரையோரக் கிளைமொழிகள், கிழக்கு மலைப்பகுதிப் பலூச்சி என்பனவாகும். இவற்றுள் ரக்ஷானிக்குத் துணைக் கிளைமொழிகளாக கலாத்தி, பஞ்குரி, சர்ஹாத்தி என்னும் மூன்று மொழிகள் தரப்பட்டுள்ளன.
Remove ads
எழுத்து
19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பலூச்சி எழுத்து வடிவம் இல்லாத ஒரு மொழியாகவே இருந்தது. உத்தியோக எழுத்து மொழியாக பாரசீகம் இருந்தபோதும், பலூச் நீதிமன்றங்களில் பலூச்சி பேசப்பட்டு வந்தது. பிரித்தானிய மொழியியலாளர்களும், அரசியல் வரலாற்று அறிஞர்களும் ரோம எழுத்து வடிவங்களையே பயன்படுத்தினர். பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர் பலூச் அறிஞர்கள், நஸ்டாலிக் அரபி எழுத்துக்களைப் பயன்படுத்தினர். ஆப்கானிஸ்தானில் பாஷ்தூ மொழியை எழுதப் பயன்படுத்தும் மாற்றம் செய்யப்பட்ட அரபி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.
Remove ads
ஒலியனியல்
உயிர்கள் | a, i, u, aː, iː, eː, uː, oː |
கூட்டுயிர்கள் | ai, au, aːi |
வெடிப்பொலிக் கூறுகள் | p, b, t, d, ʈ, ɖ, k, ɡ |
வெடிப்புரசொலிகள் | ʧ, ʤ |
உரசொலிகள் | s, z, ʃ, ʒ, h
|
மூக்கொலிகள் | m, n, ŋ |
உருட்டொலிகள் | r, ɽ |
பக்க உயிர்ப்போலிகள் | l |
உயிர்ப்போலிகள் | w, j |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads