பழக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒரு பழக்கம் (Habit) என்பது தொடர்ந்து நிகழும் மற்றும் ஆழ் மனதில் ஏற்படும் வழக்கமான நடத்தையாகும். [1]
1903 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சைக்காலஜி எனும் கட்டுரையில் " உளவியலின் அடிப்படையில் ஒரு பழக்கம் என்பது, மன அனுபவத்தை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நினைப்பது அல்லது உணரும் வழி" என்று வரையறுத்தது.[2] பழக்கமான நடத்தை பெரும்பாலும் அதை வெளிப்படுத்தும் நபர்களால் கவனிக்கப்படாமல் போகும், ஏனென்றால் ஒரு நபர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளும்போது சுய பகுப்பாய்வில் ஈடுபட அவசியமில்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. பழக்கவழக்கங்கள் சில நேரங்களில் கட்டாய நடத்தையாகும்.[3] பழக்கவழக்க ஆராய்ச்சியாளர் வெண்டி வுட் மற்றும் அவரது சகாக்கள் 2002 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில், தினசரி நடத்தைகளில் தோராயமாக 43% நடத்தைகள் தங்களது பழக்கங்கள் அல்லாதவை என்பதைக் கண்டறிந்தனர். [4] பழக்கத்தை உருவாக்கும் செயல்முறையின் மூலம் புதிய நடத்தைகள் தானாகவே மாறும். பழைய பழக்கங்களை கைவிடுவது கடினம். அதேபோல், புதிய பழக்கங்களை உருவாக்குவதும் கடினம், ஏனென்றால் மனிதர்கள் மீண்டும் செய்யும் நடத்தை முறைகள் நரம்பியல் பாதைகளில் பதிக்கப்படுகின்றன, ஆனால் மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் புதிய பழக்கங்களை உருவாக்குவது சாத்தியமாகும். [5]
Remove ads
வரலாறு
பழக்கம் என்ற சொல் இலத்தீன் வார்த்தைகளான habere என்பதிலிருந்து வந்தது, இதற்கு "உள்ளது, கொண்டது" மற்றும் habitus, அதாவது "நிலை, அல்லது இருக்கும் நிலை என்று பொருளாகும்." இது பிரெஞ்சு வார்த்தையான habit என்பதிலிருந்தும் பெறப்பட்டது ( பிரெஞ்சு உச்சரிப்பு: [abi] ), இதற்கு ஆடைகள் என்பது பொருளாகும். [6] 13 பொது ஊழியின் போது, பழக்கம் என்ற சொல் முதலில் ஆடையைக் குறித்தது. "நடத்தையின் மூலம் ஏற்பட்ட மாற்றம்" என்றவாறு பின்னர் புரிந்துகொள்ளப்பட்டது .[6]
Remove ads
தீய பழக்கங்கள்
ஒரு தீய பழக்கம் என்பது விரும்பத்தகாத நடத்தை முறையாகும். பொதுவான எடுத்துக்காட்டுகளில் பின்வருவன அடங்கும்: தள்ளிப்போடுதல், படபடப்பு, அதிக செலவு, மற்றும் நகம் கடித்தல்.[7] இந்த கெட்ட பழக்கங்களை ஒருவர் எவ்வளவு விரைவில் அடையாளம் கண்டுகொள்கிறாரோ, அவ்வளவு எளிதாக அவற்றை சரிசெய்ய இயலும். [8]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads