பாகாநாகா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாகாநாகா (Bahanaga) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலேஸ்வர் மாவட்டத்தில் உள்ள பாகாநாகா வட்டத்தில் உள்ள சிறிய கிராம் ஆகும். இது பாலேஸ்வர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக இடங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் பாகாநாகாBahanaga, நாடு ...
Remove ads

கண்ணோட்டம்

பாகாராகா வட்டம் 21 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. இதன் பிரிவு அலுவலகம் பாகாநாகாவில் உள்ளது.[1]

நிலவியல்

பாகாநாகா கிராமம் தேசிய நெடுஞ்சாலை 16-ல் அமைந்துள்ளது. இது வணிக மையமாக உள்ளது. வங்காள விரி குடாவின் கடற்கரையில் சுமார் 10-12 கி.மீ. தூரத்தில் இதன் பகுதியில் தலைமையகத்திலிருந்து கிழக்குப் பகுதியில் உள்ளது. இங்கு நிலவும் தட்பவெப்பம் மிதமானது.

மக்கள்தொகை மற்றும் கலாச்சாரம்

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,[2] இங்கு 151 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 593 ஆகும். இதில் ஆண்கள் 310 பேர், பெண்கள் 283 பேர். 0-6 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 81 (41 ஆண், 40 பெண்கள்). இந்த கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 66.41.

தொடர்பு மற்றும் போக்குவரத்து

வட்டத் தலைமையகம், பாகாநாகா இதன் அருகிலுள்ள நகரங்களான சோரோ மற்றும் பாலசோர் ஆகியவற்றுடன் சாலை மற்றும் தொடருந்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பாகாநாகா சந்தை தொடருந்து நிலையம் தினமும் கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு சேவை செய்கிறது. சில உள்ளூர் தொடருந்துகள் இங்கு நின்று செல்லும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையங்கள் சோரோ மற்றும் பாலசோர் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 16 மூலம், பாகாநாக ஒடிசாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற பெரிய பெரிய இடங்களான கோபால்பூர் மற்றும் காந்தபாரா ஆகியவை சாலைகள் அல்லது இருப்புப்பாதை வழியாக இணைக்கப்பட்டுள்ளன.

இங்கு 2023 ஒடிசா தொடருந்து விபத்து நடைபெற்றது.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads