பொட்டல நிலைமாற்றல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பொட்டல நிலைமாற்றல் (ஆங்கிலம்: Packet Switching) என்பது கணினி வலையமைப்புகளில் தரவுகளைப் பரிமாறுவதற்கு உதவும் வழியாகும். இந்த முறை மூலம் தரவுகளைப் பரிமாறுவதற்குப் பொட்டலங்கள் பயன்படுகின்றன. அதாவது, பொட்டல நிலைமாற்றலின்போது பரிமாறப்படும் தரவுகள் பொட்டலங்களாகப் (சிறு பகுதிகளாக) பிரித்து அனுப்பப்படும். பொட்டலம் என்பது சில அல்லது பல கூறுகளைக் கொண்ட சீரிய அமைப்பாகும். இந்த முறை மூலம் தரவுகளைப் பரிமாறுகையில் சமிக்ஞைகள் உருக்குலையாது பயணிக்கும். ஆனாலும் இணைய இணைப்பிலுள்ள கோளாறுகள் காரணமாகச் சில சந்தர்ப்பங்களில் பொட்டலங்கள் அனுப்பப்படாது விடலாம். இந்நிலை பொட்டல இழப்பு எனப்படும்.

Remove ads

வரலாறு

தரவுகளைச் சிறு பொட்டலங்களாகப் பிரித்து அனுப்பலாம் என்ற எண்ணக்கரு முதன்முதலாக 1960களின் முற்பகுதியில் போல் பாரன் என்ற விஞ்ஞானியால் முன்வைக்கப்பட்டது.

பின்னர், இலியோனாட் கிளின்ரொக் என்பவர் பொட்டல நிலைமாற்றல் சேவையைப் பயன்படுத்துவதற்கான இணைப்புத் தொகுப்பொன்றை அமைத்தார். இதனை அமைப்பதற்காக 1959ஆம் ஆண்டில் ஆய்வொன்றை ஆரம்பித்தார். இவர் இதற்காகவெனவே கலாநிதிப் பட்டத்தை 1962ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரே பொட்டல நிலைமாற்றல் சேவையின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.[1]

Remove ads

வலையமைப்புகளில் பொட்டல நிலைமாற்றல்

வலையமைப்புகளில் பாதைக் கொள்ளளவின் பயனை உச்ச அளவில் பெறுவதற்கும் தரவுகள் வலையமைப்பைக் கடப்பதற்கு எடுக்கும் நேரத்தைக் குறைப்பதற்கும் தொடர்பாடலின் உரன் உடைமையை அதிகரிப்பதற்கும் பொட்டல நிலைமாற்றல் சேவை பயன்படுத்தப்படுகின்றது.

பொட்டல நிலைமாற்றல் சேவையானது இணையத்திலும் பெரும்பாலான இடத்துரி வலையமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. புதிய நகர்பேசித் தொழினுட்பங்களிலும் (உ-ம்: பொதுச் சிறு பொதி அலைச் சேவை) பொட்டல நிலைமாற்றல் சேவை பயன்படுத்தப்படுகின்றது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads