பாக்சர் கிளர்ச்சி
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சீனாவில் 1899-1901இல் நடந்த கிளர்ச்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாக்சர் கிளர்ச்சி (Boxer Rebellion) என்பது அயல் நாடுகளுக்கு எதிராக, காலனித்துவத்திற்கு எதிராக மற்றும் கிறித்தவத்திற்கு எதிராக 1899 மற்றும் 1901ஆம் ஆண்டுக்கு இடையில் சீனாவில் ஏற்பட்ட கிளர்ச்சியாகும். இது பாக்சர் கலகம் அல்லது இகேதுவான் இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது சீனாவின் சிங் அரசமரபின் முடிவின் போது ஏற்பட்டது. இந்த கிளர்ச்சியில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் "பாக்சர்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். ஏனெனில் இந்த இயக்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் சீன சண்டை கலைகளை அறிந்தவர்களாக இருந்தனர். அந்நேரத்தில் இக்கலைகள் "சீன குத்துச்சண்டை" என்று குறிப்பிடப்பட்டதால் இப்பெயரை இக்கிளர்ச்சி பெற்றது.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads