பாசித்திரள்
பிளாங்டன் பாசிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கும் அல்லது திரளும் நிகழ்வு From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாசித்திரள் அல்லது பாசிப்படர்ச்சி (algal bloom) என அறியப்படும் நிகழ்வானது பாசிகளால் (அ) அலைதாவரங்களால் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய திடீர் சூழ்நிலை மாற்றமாகும். இது நீர்நிலைகளில் காணப்படும் பாசிகள் அல்லது தாவரங்கள் தனக்கு ஒத்தச் சூழ்நிலை வரும்போது இனப்பெருக்கம் திடீரென மிகுதியாகி நீர்நிலையின் மேற்பரப்பில் படர்ந்து (மொத்த நீர்நிலையே மூடிய வன்னம்) பாசிகளின் சேர்க்கையாக காட்சியளிக்கும். இதையே நாம் பாசிப்படர்ச்சி/பாசித்திரள் என விளிக்கின்றோம்.

பாசித்திரள் நன்னீரிலோ கடல் நீரிலோ தனக்கு ஏற்ற சூழ்நிலைகள் உருவாகும் வேளைகளில் தோன்றுகின்றன. பொதுவாக சில குறிப்பிட்ட இன அலைதாவரங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட பாசியே இதற்குக் காரணமாகின்றது. சில பாசித்திரள்கள் எளிதில் அடையாளம் காணக்கூடியவாறு நீரின் மேற்பரப்பு நிறம் மாறிக் காணப்படும், இதற்கு பாசிகளில் உள்ள நிறமிகள் தான் காரணம். வழமையாக பாசித்திரள் பச்சை நிறத்தில் காணப்பட்டாலும் மஞ்சள், பழுப்பு, சிவப்பு போன்ற நிறங்களில் காணப்படலாம், இது பாசி இனத்தைப் பொறுத்து வேறுபடுகின்றது.
வெண்பச்சை பாசித்திரள் நீலப்பச்சைப்பாசியால் ஏற்படுகின்றது. நீலப்பச்சைப் பாசிகளில் குறிப்பிடத்தக்கவனவாக அனபென்னா, ஆசிலடோரியா, நாசுடாக்கு மற்றும் மைக்ரோசிச்டிச் என்னும் பேரினங்கள் பாசிப்படர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன [1].
பாசித்திரளில் முக்கியமாகக் கருதவேண்டியது கெடுதியான/நச்சுமிகுந்த பாசித்திரள் ஆகும். இந்நிகழ்வில் பாசிகள் நச்சுப்பொருட்களை வெளிவிடுகின்றன. அலெக்சந்திரியம் (Alexandrium) மற்றும் கரெனியா என்னும் ஈர்கசைவாழி (Dinoflagellate) போன்ற அலைதாவர இனங்கள் இதற்கு எடுத்துக் காட்டாகும். இத்தகைய பாசித்திரள்கள் பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் கடற்கரைப்பகுதிகளில் தோன்றுவது செவ்வலைகள் (Red Tide) என்று அழைக்கப்படுகின்றது.
நீலப்பச்சைப்பாசிகளில் குறிப்பிடத் தக்கவனவாக மைக்ரோசிச்டிச் மற்றும் நாடுலேரியா என்னும் பேரினங்கள் முறையே மைக்ரோசிச்டின் மற்றும் நாடுலாரின் என்னும் நச்சுக்களை வெளிவிடுகிறது.
Remove ads
தமிழகத்தில்
தமிழகத்தின் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பாசித்திரள் தோன்றுகிறன்றன. இதனை மீனவர்கள் பூங்கோரை என்றழைக்கின்றனர். இவை கடலில் படரும் போது கடல்நீர் பச்சை நிறத்தில் மாறிவிடும். அப்போது கடல் நீர்ரோட்டம், கடல் அலை, சூறைக்காற்று, போன்றவற்றின் காரணமாக இவை கடலின் பல்வோறு பகுதிகளுக்கு பிரிந்து சென்றுவிடுவதால் பெரும்பாலும் மீன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சில ஆண்டுகளில் கடல் நீர்ரோட்டம், கடல் அலை, கடுங்காற்று போன்றவை இல்லமல் போகும்போது இந்த பாசிகள் இடம்பெயராமல் குறிப்பிட்டப் பகுதியில் தேங்கிவிடுக்னிறன. அப்போது இந்த நுண்ணுயிர் கடற்பாசிகளை மீன்கள் சாப்பிடுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன.[2]
Remove ads
தீமைகள்

- நீரில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் கிடைத்து பலக் காலம் நீடிக்குமேயானால் தக்கச் சூழ்நிலையில் பாசிகள் வளர்ந்து சுற்றுச்சூழலைப் பாதிக்கும்.
- பாசிகள் படர்வதால் பகலவன் ஒளி நீரிர்க்கு அடியில் செல்லாமல் மற்ற நீர்த்தாவரங்கள் பாசிகள் வளரத் தடையாக இருக்கிறது.
- கடல்களில் பாசிப்படர்ச்சியால் கீழ்த்தட்டிலுள்ள கடற்பாசிகள் மற்றும் செடிகளுக்கு அழுத்தத்தை உண்டுச் செய்து அழிக்கிறது/வளர்ச்சியைத் தடை செய்கிறது. இதனால் இவற்றை நம்பி இருக்கும் பல விலங்குகள் இறந்து ஒட்டு மொத்த இனமே வீழ்ச்சியடையும் நிலைக்குக் கூட இட்டுச் செல்கிறது.
- அலைத்தாவரம் மற்றும் மீன்குஞ்சுகள் பாசி மற்றும் அலைதாவரங்களை உண்கின்ற போதும் பாசிப்படர்ச்சியின் காலங்களில் இவைகளும் உண்டுக் கொழுக்கின்றன. இவைகளால் ஒருக் குறிப்பிட்ட இனமட்டும் மிகுந்து வளரும் சூழ்நிலை ஏற்பட்டு சூழ்நிலைக் கேடாகிறது.
- பாசிகள் வளர்ச்சியால் நீரில் கரைந்துள்ள உயிர்வளியின் (Dissolved Oxygen) அளவுக் குறைந்து அப்பகுதியில் வாழும் நீர்வாழ் இனங்களே அழியக்கூடியச் சூழ்நிலைக்கு காரணமாகிறது.
- சில அலைத்தாவரங்கள் நீரில் நச்சுப்பொருட்களை வெளியிட்டு அங்கு வாழும் உயிரினங்களுக்கும் ஏன் மனிதர்களுக்கும் அவைத் தீங்கை விளைவிக்கின்றன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு - செவ்வலைகளாகும் [3].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads