பாண்டிக்கோவை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாண்டிக்கோவை என்னும் நூலின் பாடல்கள் இறையனார் களவியல் நூலுக்கு நக்கீரர் எழுதிய உரையில் மேற்கோள் பாடல்களாகத் தரப்பட்டுள்ளன. மதுரையிலிருந்துகொண்டு நாடாண்ட பாண்டியன் ‘அரிகேசரி நெல்வேலி வென்ற நெடுமாறன்’ இதன் பாட்டுடைத் தலைவன். இவன் திருஞான சம்பந்தர் காலத்தவன். கி.பி. 7-ஆம் நூற்றாண்டு. நக்கீரர் எழுதிய களவியல் உரை 10-ஆம் நூற்றாண்டு. இந்த நூலின் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாக இங்குத் தரப்படுகின்றன.

‘வண்டுறை வார்பொழில் சூழ்நறை யாற்றுடின் ஓடவைவேல்
கொண்டுறை நீக்கிய தென்னவன் கூடற் கொழுந்தமிழின்
ஒண்துறை மேலுள்ள மோடிய தோஅன்றி யுற்றதுண்டோ
தண்துறை வாசிந்தை வாடிட என்னீ தளர்கின்றதே.’ (23)
‘தெவ்வா யெதிர்நின்ற சேரலர் கோனைச் செருக்கழித்துக்
கைவானி தியமெல் லாமுட னேகடை யற்கவர்ந்த
நெய்வா யயினெடு மாறன் பகைபோல் நினைந்துபண்டை
ஒவ்வா வுருவம் ஒழியுமென் னோவள்ள லுள்ளியதே.’ (24)
Remove ads

கருவிநூல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads