பாண்டிச்சேரி அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாண்டிச்சேரி அருங்காட்சியகம் (Pondicherry Museum) என்பது இந்தியாவின் பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் வரலாற்று அருங்காட்சியகம் ஆகும். சோழர் சாம்ராஜ்ய காலம் முதலான காலங்களைச் சேர்ந்த வெண்கலச் சிற்பங்களின் தொகுப்பிற்காக இந்த அருங்காட்சியகம் மிகவும் புகழ் பெற்றது.
காட்சிப்பொருள்கள்
இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் அதிக எண்ணிக்கையிலான சோழ வெண்கலங்களின் மிகப்பெரிய தொகுப்புகள் காணப்படுகின்றன. அவற்றுள் 81 சோழ வெண்கல சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளன.[1] யவனர்களின் (கிரேக்க) வணிகத் துறைமாக இருந்த அரிக்கமேடு என்னும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட கலைப் பொருள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அரிக்கமேடு தற்போதைய நவீன பாண்டிச்சேரி நகருக்கு வடக்கில் அமைந்திருந்த பகுதியாகும். கி.மு.முதல் நூற்றாண்டுக்கும், கி.பி.முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கும் இடையே இருந்த பெருமையுடைய நகராகும்.[2] பாண்டிச்சேரி நகரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பண்டைய துறைமுகமான அரிக்கமேட்டின் கலைப்பொருள்களைக் கொண்டு அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் அரிக்கமேட்டுத் தொல்பொருள்களும், பல்லவர்கள் மற்றும் சோழர் காலங்களைச் சேர்ந்த கற்சிற்பங்களும் உலோகச் சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நடைவெளிப் பகுதியிலும், முற்றப் பகுதியிலும் பல வகையான கல் சிற்பங்கள் மற்றும் பதனம் செய்யப்பட்ட மரத்தின் தண்டுகளும் உள்ளன. தரை தளத்தின் மையப்பகுதியில் மூன்று வகையான போக்குவரத்து தொடர்பான பொருள்கள் உள்ளன. அவை ஒரு கோச், ஒரு பல்லக்கு மற்றும் தற்போதைய ரிக்ஷா போல் அமைந்த அக்கால அமைப்பு ஆகியவையாகும். அதனை இயக்க ஒருவரும் தள்ள ஒருவரும் தேவைப்படுவர். உலோகச் சிற்பங்களைக் கொண்டுள்ள காட்சிக்கூடத்தில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பல அரச வம்சத்தினர் காலத்திய இறைவன் உருவங்களும், இறைவி உருவங்களும், கோயில் விளக்குகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிறித்தவ காலத்திற்கு முந்தைய அரிய பொருள்களையும் இங்கு காணலாம் அவற்றில் கிரேக்க மற்றும் உரோமானிய காலத்துக் குடுவைகள் அடங்கும். மேலும் சீனாவின் ஷங் வம்சத்தைச் சேர்ந்த கலைப்பொருள்களும் இங்கு காட்சியில் உள்ளன. இங்கு தனியாக நிலவியல் பிரிவு இயங்கி வருகிறது. அப்பிரிவில் ஷெல் உள்ளிட்டவை உள்ளன. மேலும் பிரெஞ்சு தளவாடஙகள், நாணயங்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவையும் உள்ளன.[3] பாரதி பார்க்கில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழிகளும் காட்சியில் உள்ளன.[4]
Remove ads
பார்வையாளர் நேரம்
பாண்டிச்சேரி அருங்காட்சியகத்திற்கு திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் விடுமுறை நாள்களாகும். பிற நாள்களில் பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பார்வையிடலாம். இந்த அருங்காட்சியகம் லூயி தெருவில், முந்தைய சட்டக் கட்டடத்தில் அமைந்துள்ளது.[3] இந்த At a distance of பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து இந்த அருங்காட்சியகம் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வருகின்ற பார்வையாளர்களிடம் ஒருவருக்கு ரூ.15 என்ற அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.[4]
Remove ads
அருகிலுள்ள இடங்கள்
பாண்டிச்சேரி அருங்காட்சியகம் அருகே பல அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. அவை அனந்தரங்கம்பிள்ளை அருங்காட்சியகம், பாரதிதாசன் அருங்காட்சியகம், ஜவஹர் விளையாட்டு பொம்மைகள் அருங்காட்சியகம், புதுச்சேரி அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் ஆகியவை ஆகும்.[5] பாண்டிச்சேரி நகரில் இவை தவிர கடற்கரை, ஆரோவில், சுன்னாம்பார் படகு இல்லம், பாரதி பூங்கா, மணக்குள விநாயகர் கோயில், மகாத்மா காந்தி சிலை, பிரெஞ்சுப் போர் நினைவுச்சின்னம், ஆரோவில் கடற்கரை, ராஜ் நிவாஸ், டூப்ளே சிலை, ரோமன் ரோலண்ட் நூலகம், பழைய கலங்கரை விளக்கம் ஆகியவை உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.[6]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads