பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

11°56′13″N 79°50′10″E

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் என்பது புதுச்சேரியில், பிரான்சு நாட்டின் அரசின் துணையுடன் இயங்கும் ஒரு ஆய்வு நிறுவனம் ஆகும். இது ழான் ஃபில்லியொசாவால் நிறுவப்பட்டது. இந்தியவியல், சமூக அறிவியல், தொல்லியல், சூழ்நிலையியல் ஆகிய துறைகளில் இது ஆய்வுகளை மேற்கொள்கிறது. இந்தியவிலின் ஒரு முக்கிய பிரிவாக தமிழியல் துறையும் உள்ளது. இந்த நிறுவன நடுவத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆவணங்கள் உள்ளன.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி, பிஹார், உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரம், ஒடிசா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் உள்ள கோயில்களின் சிலைகள், கோயில்களில் வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்கள், கோயில் நகைகள், ஓலைச்சுவடிகள் என 1,35,629 ஒளிப்படங்களை டிஜிட்டல் மயப்படுத்தி வைத்துள்ளனர். மேலும் பழங்காலத்து ஓலைச் சுவடிகளை தனியாக நூலகம் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள். இந்நிறுவனம் ஆய்வு மாணவர்களுக்கு அரிய கருவூலமாக உள்ளது.

இந்நிறுவனத்தினர் 1956-லிருந்து தற்போது வரை 2,500 ஊர்களுக்குப் பயணித்து ஏறத்தாழ 4000 இடங்களில் உள்ள கோயில் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை ஒளிப்படங்களாக ஆவணப்படுத்தி இருக்கிறது.

இந்நிறுவனத்திடம் உள்ள தமிழ்நாடு தொடர்பான தொல்லியல் ஆவணங்களை, தமிழக இந்து சமய அறநிலையத் துறை கேட்டுள்ளது. [1]

Remove ads

தமிழியல் பிரிவு ஆய்வுகள்

  • தற்கால தமிழ்ப் பண்பாடு
  • தமிழ் சைவ தேவாரங்கள்
  • Historical Atlas of South India

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads