பாதரசம்(I) நைட்ரேட்டு

From Wikipedia, the free encyclopedia

பாதரசம்(I) நைட்ரேட்டு
Remove ads

பாதரசம்(I) நைட்ரேட்டு (Mercury(I) nitrate) என்பது Hg2(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற பாதரச(I) சேர்மங்களைத் தயாரிக்க இது அடிப்படைப் பொருளாகப் பயன்படுகிறது. மற்ற பாதரசச் சேர்மங்களைப் போலவே இச்சேர்மமும் ஒரு நச்சு மிக்க சேர்மமாகும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

வினைகள்

தனிமநிலை பாதரசம் நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் இணைந்து வினைபுரியும் போது பாதரசம்(I) நைட்ரேட்டு உருவாகிறது. அடர் நைட்ரிக் அமிலம் பயன்படுத்தினால் பாதரசம்(II) நைட்ரேட்டு உருவாகும். பாதரசம்(I) நைட்ரேட்டு காற்றுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் ஆக்சிசனேற்றம் அடைகிறது. தண்ணீருடன் மெதுவாக வினைபுரிவதால் பாதரசம்(I) நைட்ரேட்டு கரைசல்கள் அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன.

தண்ணீருடன் மெதுவாக வினைபுரிவதால் பாதரசம்(I) நைட்ரேட்டு கரைசல்கள் அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன.

Hg2(NO3)2 + H2O → Hg2(NO3)(OH) + HNO3

Hg2(NO3)(OH) மஞ்சள் நிற வீழ்படிவாக உருவாகிறது.

பாதரசம்(I) நைட்ரேட்டு கரைசலை கொதிக்க வைத்தாலோ அல்லது ஒளியில் பட நேர்ந்தாலோ இது விகிதச் சமமாதலின்றி பிரிகை அடைந்து பாதரசம் மற்றும் பாதரசம் (II) நைட்ரேட்டுகளைக் கொடுக்கிறது.

Hg2(NO3)2 → Hg + Hg(NO3)2
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads