பாமா (நடிகை)

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாமா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ், மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டில் ஏ. கே. லோகித்தாசு இயக்கிய நிவேத்யம் திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமானார். "எல்லாம் அவன் செயல்" திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

விரைவான உண்மைகள் பாமா, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

ராஜேந்திர குறுப்பு, ஷைலஜா ஆகியோரின் இளைய மகள் ஆவார். இவருக்கு ரேச்மிதா, ரெஞ்சிதா என இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். இவர் புனித மேரி மேல்நிலை பள்ளியிலும், மண்ணார்க்காட்டில் உள்ள குழந்தை இயேசு பள்ளியிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் பெற்றோரின் அனுமதியோடு பாரத்கோபி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.[1] இவர் தொலைநிலைக்கல்வி வாயிலாக இளங்கலை சமூகவியல் படிக்க தொடங்கியுள்ளார்.[2]

திரை வாழ்க்கை

இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்னதாக, சூர்யா தொலைக்காட்சியில் தாலி என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். இவர் ஒரு கிறித்துவ பக்தி ஆல்பத்திலும் நடித்துள்ளார். இவர் அறிமுகமான நிவேத்யம் திரைப்படத்தின் இயக்குநரான லோகிததாசை தனது வழிகாட்டியாளராகவும் குருவாகவும் கருதுகிறார். வினயன் இயக்கத்தில் மணிக்குட்டன் நடித்த அரீந்தரன் ஒரு நிஷ்களங்கன் திரைப்படம் இவரது இரண்டாவது திரைப்படமாகும். ஜானி ஆண்டனி இயக்கிய சைக்கிள் திரைப்படத்தில் வினீத் சீனிவாசனுடன் இணைந்து நடித்தார்.

2011-ம் ஆண்டில் மலையாளத்தில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால் இவர் தனது பார்வையை கன்னட திரையுலகிற்கு திருப்பினார். சில கன்னடத் திரைப்படங்களில் நடித்த பிறகுதான் மலையாளத்தில் புதுமையான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாக கூறுகிறார்..[3] இவர் எம். டி. வாசுதேவன் நாயரின் கதவீடு திரைப்படத்தில் கதாநாயகியாக ஒரு நவீன பெண் வேடத்தில் நடித்தார். வினோத் விஜயனின் டி கம்பெனி திரைப்படத்தில் முக அலங்காரம் ஏதும் செய்யாமல் ஒரு சிறிய ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் சைக்கோவாக நடித்தார்.[3] ராகேஷ் கோபனின் 100 டிகிரி செல்சியஸ் திரைப்படத்தில் கிறிஸ்துவ இல்லத்தரசியாக நடித்தார். இவர் முதல் முறையாக வினோத் மாங்கரா இயக்கிய ஒட்டமந்தாரம் திரைப்படத்தில் தன்னை விட 15 வயது அதிகமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார்.[4]

பின்னணிப் பாடகி

நடிகையாக மட்டுமல்லாமல் சில நேரங்களில் இவர் சிறந்த பின்னணிப் பாடகியாகவும் திகழ்கிறார். இவர் தனது முதல்பாடலை பைக் திரைப்படத்தில் ராகுல்ராஜ் இசையில் கண்ணில் கண்ணில் எனும் பாடலை பாடினாலும்கூட சில காரணங்களால் அத்திரைப்படம் திரைக்கு வராமல் போனது.[5][6] அதன்பின்னர் 2009-ல் வெளியான மாய மாதவம் எனும் பக்தி ஆல்பத்தில் பாடியுள்ளார்.[7] மேலும் சிறுவர்கள் நடித்து வெளிவரவிருக்கும் மியாவ் மியாவ் கரிம்பூச்சா திரைப்படத்தில் ஆரம்ப பாடலை பாடியுள்ளார்..[8]

Remove ads

விருதுகள்

  • 2007 - சிறந்த ஜோடிக்கான ஏசியாநெட் திரைப்பட விருது - நிவேத்யம் (வினு மோகனுடன் பகிர்ந்துகொள்கிறார்)[9]
  • 2007 - சிறந்த அறிமுக நடிகைக்கான சத்யன் நினைவு விருது - நிவேத்யம்[10]
  • 2007 - சிறந்த அறிமுக நடிகைக்கான திரைப்பட விமர்சகர்கள் விருது - நிவேத்யம்[11]
  • 2007 - சிறந்த நடிகைக்கான ஆலா விருது - நிவேத்யம்[12]
  • 2007 - சிறந்த அறிமுக நடிகைக்கான வனிதா நிப்பான் விருது - நிவேத்யம்[13]
  • 2008 - சிறந்த ஜோடிக்கான அம்மா திரைப்பட விருது - சைக்கிள்
  • 2009 - சிறந்த ஜோடிக்கான மாத்ருபூமி-அம்ரிதா திரைப்பட விருது - இவார் விவாகித்தரயாள் (ஜெயசூர்யாவுடன் பகிர்ந்துகொள்கிறார்)[14]

நடித்த திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் எண், ஆண்டு ...
Remove ads

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads