பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சு (Buntline hitch) கயிறொன்றை ஒரு பொருளுடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு முடிச்சு ஆகும். பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதுமான இம் முடிச்சு கூடிய சுமையைத் தாங்கியபின்னர் இறுகிவிடக்கூடும். இதனால், இம் முடிச்சைப் பயன்படுத்த வேண்டி ஏற்படும்போது சிலவேளைகளில் இதனை உருவி அவிழ்க்கக் கூடிய வடிவில் போடுவது வழக்கம். இம் முடிச்சை முடிவதற்கு முதலில் இரண்டாம் அரைக் கண்ணிமுடிச்சு கட்டவேண்டிய பொருளை நோக்கி இருக்கும்படி, கயிற்றின் நிலைத்த பகுதியைச் சுற்றி ஒரு பிரிநிலைக் கண்ணிமுடிச்சைப் போட்டுக் கொள்வர்.
Remove ads
வரலாறு
மிகவும் எளிமையானதும், பயன்பாட்டுத்திறம் கொண்டதுமான இந்த முடிச்சுப் பழங்காலத்திலேயே புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது. பாய்மரக் கப்பல்களின் காலத்தில், குறுக்குப் பாய்மரக் கயிறமைப்புக் கொண்ட கப்பல்களில் பாய்மரக் கயிறுகளைப் பாய்களின் அடிப்பகுதியில் கட்டுவதற்கு இம் முடிச்சையே பயன்படுத்தினர். இத்தேவைக்கு இம் முடிச்சு விரும்பப்பட்டமை அதன் பாதுகாப்பையும், நம்பகத் தன்மையையும் காட்டுகிறது. இம் முடிச்சு உறுதிப்பட்டதும், குலுக்கல்கள் முதலியன முடிச்சை மேலும் இறுக்குவதேயன்றித் தளர்வடையச் செய்யா.
தற்காலத்து வழுக்கும் தன்மை கொண்ட செயற்கைக் கயிறுகளிலும் இம்முடிச்சு திறம்படச் செயல்படுவதால் அண்மைக்காலத்தில் இம் முடிச்சின் பயன்பாடு கூடியுள்ளது.
Remove ads
பயன்பாடு
பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சு, கயிறுகளை, வளையங்கள், துளைகள், தூண்கள், கழிகள் போன்றவற்றுடன் இணைப்பதற்கு சிறிய அளவினதும், பாதுகாப்பானதுமான முடிச்சுத் தேவைப்படும் இடங்களில் பயன்படுகின்றது. வழுக்கு முடிச்சல்லாத வடிவம் இடைத்தரமான சுமைகளுக்கும், அவிழ்க்கப்படவேண்டிய தேவையற்ற வேளைகளிலும் பயன்படுத்த உகந்தது. கூடிய சுமைகள் தொடர்புபடும்போது இம் முடிச்சுக்கள் அவிழ்க்க முடியாதவாறு இறுகிவிடுகின்றன.
இதன் வழுக்கு முடிச்சு வடிவம் பாதுகாப்பானதும் தற்காலிகமானதுமான கண்ணிமுடிச்சுத் தேவைப்படும்போது வசதியானது. எடுத்துக்காட்டாக வண்டிகளில் சுமைகளை வைத்துக் கட்டும்போது ஒரு பக்கத்தில் நிரந்தரமான சுமையுந்துக் கண்ணி முடிச்சையும் அடுத்த பக்கத்தில் பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சின் வழுக்கு வடிவத்தையும் பயன்படுத்தலாம்.
Remove ads
கட்டும்முறை
பொது வடிவம்

வழுக்கு வடிவம்

குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads