பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (Bharat Dynamics Limited, BDL, இந்தி: भारत डायनामिक्स लिमिटेड ) இந்தியாவின் படைக்கலங்களையும் ஏவுகணைகளையும் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். 1970ஆம் ஆண்டு ஆந்திரத் தலைநகர் ஐதராபாத்தில் நிறுவப்பட்டது. [1]
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறு நவரத்தின மதிப்பைப் பெற்ற நிறுவனம் ஆகும்.
Remove ads
தயாரிப்புகள்
இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட படைக்கலங்களை தயாரிப்பதற்காக இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புடன் இணைந்து இந்தியாவின் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. பாரத் டைனமிக்சில் தயாரான முதல் ஏவுகணை பிரித்திவி ஆகும். [2]
1998ஆம் ஆண்டில் பிடிஎல் தயாரித்த அக்னி ஏவுகணைகள் இந்தியப் படைத்துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியப் படைத்துறைக்கு வேண்டிய பிற ஏவுகணைகளையும் அமைப்புகளையும் பிடிஎல் தயாரித்தளிக்கிறது. இவற்றில் பீரங்கிவண்டிகளுக்கு எதிரான கொங்கூர் ஏவுகணைகள் குறிப்பிடத்தக்கவை.[3]
Remove ads
இதனையும் காண்க
- பொதுத்துறை நிறுவனம்
- பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்
- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads