பாலின இயக்க ஊக்கி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாலின இயக்க ஊக்கி (Sex steroids) அல்லது பாலக இசைம இயக்க ஊக்கி (gonadal steroids) என்பவை முதுகெலும்பிகளின் ஆண்பால் இயக்குநீர் அல்லது பெண்பால் இயக்குநீர் புரத வாங்கியுடன் வினைபுரியும் இயக்கக இயக்குநீராகும்.[1] இவற்றின் தாக்கங்கள் அணுக்கருவ வாங்கிகள் மூலமாக மெதுவான பாலக இசைம அமைப்புகளாலோ சவ்வுசார் வாங்கிகள் மற்றும் சமிக்ஞை கடத்துகைகள் மூலமாக விரைவான பாலக இசைமமல்லாத அமைப்புகளாலோ தூண்டப்படுகின்றன.[2] பாலின இயக்குநீர் என்பது பெரும்பாலும் பாலின இயக்க ஊக்கிக்கு இணையாகவே பயன்படுத்தப்படுகின்றது. பால்வினைசார் வினைகளில் இயக்க ஊக்கியல்லாத இயக்குநீர்களான லூட்டினைசிங் இயக்குநீர், கருமுட்டை தூண்டும் இயக்குநீர், கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் போன்றவை முதன்மை பங்கேற்றாலும் வழமையாக இவை பாலின இயக்குநீராகக் கருதப்படுவதில்லை.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads