பாலின முனைவாக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலின முனைவாக்கம் (Gender polarization) எனும் சமூகவியல் கருத்தினம் (அமெரிக்க உளவியலாளர் சாந்திரா பேம் கூறியது) சமூகங்கள் பெண்மையையும் ஆண்மையையும் எதிர்நிலை முனைப் பாலினங்களாக வரையறுக்க முயல்கின்றன எனக் கூறுகிறது; இந்த ஆண் ஏற்பு நடத்தைகளையும் மனப்பான்மைகளையும் பெண்களுக்கு உகந்தனவல்ல என்றும் அதேபோல, பெண் ஏற்பு நடத்தைகளையும் மனப்பான்மைகளையும் ஆண்களுக்கு உகந்தனவல்ல என்றும் இது கருதுகிறது.[1][2] இந்தக் கோட்பாடு பால், பாலின வேறுபாடு எனும் சமூகவியல் கருத்தினத்தின் விரிவாக்கம் ஆகும். பின்னதில் பால் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் பிறப்புவழி அமையும் உயிரியலான வேற்பாட்டைச் சுட்டும்; அதேபோல பாலினம் என்பது அவர்களுக்கிடையில் உள்ள பண்பாட்டு வேறுபாட்டைச் சுட்டும்; குறிப்பாக பாலினம் என்பது " ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு சமூகம் உகந்ததெனக் கருதும் நடத்தைகள், செயல்பாடுகள், மனப்பான்மைகள் சமூகப் புனைவுகளின் கணத்தைச் சுட்டி" விளக்குகிறது.[3] பேம் கூற்றுப்படி, பாலின முனைவாக்கம் இயற்கை பாலுணர்வு வேறுபாடுகள் பண்பாட்டில் உயர்வுநவிற்சி ஆகும்போது தொடங்குகிறது; எடுத்துகாட்டாக, பெண்கள் ஆண்களை விட கூடுதலான முடியைப் பெற்ருள்ள;[4]ஆண்கள் பெண்களை விட கூடுதலான தசை வலிமையைப் பெற்றுள்ளனர்; ஆனால், இந்தப் புறநிலை வேறுபாடுகள் பண்பாட்டில் மிகைப்படுத்தப்படும்போது பெண்கள் செயற்கையாக த்ம் முகம், கால், அக்குள் மயிரை நீக்குகின்றனர்; ஆண்கள் தம் தசை வலிமையைக் கூட்ட, உடற்பயிற்சி செய்கின்றனர்.[5]
ஆண் இயற்கூறுகள் | பெண் இயற்கூறுகள் |
அறிவார்ந்தன | உணர்வு சார்ந்தன |
முனைவானவை | முடங்கியவை |
ஓங்கலானவை | அடங்கியவை |
ஏற்கத்தகுந்தவை | ஊற்றமானவை |
தனித்தன்மையன | வளர்தகவின |
Source: Christine Monnier in Global Sociology[1] |


அவர் குறிப்பிட்ட பண்பாடு " பாலின வேறுபாடுகளை அவற்றின் இயல்பான இருப்புநிலைக்கு மாறாக ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டிருக்கும்படி புனையும்போது", குறிப்பாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனியான குறிப்பிட்ட முடியழகு வகைகளை வரன்முறைப்படுத்தும்போதும் அல்லது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனியான உடைவகைகளை வரன்முறைப்படுத்தும்போதும் பாலின முனைவாக்கம் மேலும் கூடுகிறது என விளக்குகிறார்.[5] When genders become polarized, according to the theory, there is no overlap, no shared behaviors or attitudes between men and women; rather, they are distinctly opposite.[1] அவர் வேறுபாடுகள் மேலும் அனைத்துக் கலங்களிலும் விரிவடையும்போது, அதாவது முடியழகு, உடைவகை மட்டுமல்லாமல் உணர்ச்சி, பாலுணர்வுப் பட்டறிவு என நிலவும் அனைத்து மாந்தக் கூறுபாடுகளிலும் பரவும்போது பாலின விரிவாக்கம் மேலும் கூர்மையடைகிறது என்று வாதிடுகிறார்.[6] அவர் மேலும் கூறுகிறார்: சமூகம் சார்ந்த பல்வேறு கூறுபாடுகளிலும் ஆண்-பெண் வேறுபாடுகள் மேற்படிதலால் மாந்தப் பட்டறிவு சார்ந்த அனைத்துக் கூறுபாடுகளிலும் இந்தப் பண்பாட்டு அழுத்தம் இறுகி வலைமையடைகிறது".[7]
பேம் பாலின முனைவாக்கம் எனும் ஆளுகைசார் நெறிமுறை ஊடாக பல அடிப்படையான சமூக நிறுவனங்கள் கட்டியமைக்கப்படுவதாகக் காண்கிறார். [8] எடுத்துகாட்டாக, பாலின முனைவாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகள் சட்ட விதிமுறைத் தொகுப்புகளாக இயற்றப்பட்டுள்ளன.[8] மிக அண்மையில் மேற்கத்திய சமூகத்தில்,ஐந்தச் சட்ட விதிமுறைகள் பெண்களை வாக்குச் சீட்டு போடவும் அரசியல் பதவிகளை ஏற்கவும் பள்ளி செல்லவும் சொத்து வாங்கவும் படைசார் பதவிகள் வகிக்கவும் சிஅ தொழில்களில் இணையவும் குறிப்பிட்ட விளையாட்டுகளில் பங்கேற்கவும் தவிர்க்கின்றன.[8]எடுத்துகாட்டாக, 1896 ஆம் ஆண்டைய கோடை ஒலிம்பிக் விளையாட்டு ஆடவர் மட்டும் கலந்துகொள்லும் நிகழ்ச்சியாக அமைந்தது; அதில் பெண்கள் விலக்கி வைக்கப்பட்டனர். இதைப் பாலின முனைவாக்கத்துக்கான முதன்மையான சான்றாக இனங்காணலாம்.[8] மேலும் இச்சொல், இலக்கியக் கோட்பாட்டிலும் பயனபடுகிறது.[9]
இசுகாட் கோல்திரேனும் மீழ்சல் ஆடம்சும் பாலின முனைவாக்கம் இளமையிலேயே தொடங்கிவிடுகிறது எனக் கூறுகின்றனர். இளமையில் பெண்குழந்தைகளை வெளிர்சிவப்பு நிறத்தை நீலத்துக்குப் பதிலாக தேர்வு செய்யவும் ஆண்குழ்ந்தைகளைப் பொம்மைகளுக்குப் பதிலாக பொம்மை சரக்குந்தின் பெட்டிகளோடு விளையாடவும் ஊக்குவிக்கிறோம். இதெஎ போல பலவழிகளில் ஆண்-பெண் வேறுபாட்டைக் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துகிறோம்.[10]குழந்தைகள் பாலின நடத்தையைப் பிறரைப் பார்த்தும் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது எனும் பயிற்றுதலாலும் கற்றுக் கொள்கின்றனர் என எலிசபெத் இலிண்டுசேவும் வல்டேர் சகாகியும் கூறுகின்றனர்.[11]பேம் பாலின முனைவாக்கம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபட்ட ஒன்றையொன்று தவிர்த்த ஒழுங்குமுறைகளைக் கற்பிக்கிறது என வாதிடுகிறார்.[8]
இந்த ஒழுங்குமுறைகள் தனியர் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பைச் செலுத்துகின்றன;[8][12] பேம் கடந்த கால முனைவாக்கம் பெண்களை வீட்டுப் பணிகளில் முடக்கின; ஆண்கள் பொதுவெளியில் தொழில்புரிவோராக உலா வந்தனர் என் வாதிடுகிறார்.[13] உணர்ச்சி வெளிப்படுத்துவதிலும் ஆண், பெண் பாத்திரங்களுக்கு உகந்தவற்றை வரையறுப்பதிலும் பண்பாடுகள் கணிசமான அளவில் வேறுபடுகின்றன.[14]
Remove ads
மேலும் காண்க
- பாலின இருமை
- பாலினப் பாகுபாடு
- பாலின அடையாளம்
- பாலினப் பாத்திரம்
- கலப்புப் பாலுணர்வு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads