பால் (இலக்கணம்)

சொல்லிலக்கணம் - தமிழ் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பால் என்பதற்கு பகுப்பு/பிரிவு என்று பொருள். இலக்கண நூல்கள் மக்கள் போன்ற உயர்திணையை மூன்று பாலாகவும் (பகுப்புகளாகவும்) அஃறிணையை இரண்டு பாலாகவும் பிரித்துக் காட்டியுள்ளன.

அஃறிணைக்குரிய பால்கள்

அஃறிணைக்குரிய பால்கள் இரண்டு வகைப்படும்.அவை,

  1. ஒன்றன் பால்
  2. பலவின்பால்

ஆகும்.

பாலுக்குரிய ஈறுகள்(விகுதிகள்)

பாலின் தன்மை இத்தகையது எனக் காட்டுபவை ஈறுகளாகும். இவை பெரும்பாலும் வினைச் சொற்களில் வரும் ஈறுகளையே குறிக்கும்.

ஆண்பால்

கர ஈறுகள் ஆண்பாலை உணர்த்தும்.
எ.கா:
அவன், இவன், வந்தான்.

பெண்பால்

கர ஈறுகள் பெண்பாலை உணர்த்தும்
எ.கா:
அவள், இவள், வந்தாள்.

பலர்பால்

அர், ஆர் என்பன பலர்பாலை உணர்த்தும்
எ.கா:
வர், இவர், உண்டார்.

ஒன்றன்பால்

து, று, டு என்பன ஒன்றன்பாலை உணர்த்தும்.
எ.கா:
வந்தது, தாவிற்று, குறுந்தாட்டு (குறுகிய காலை உடையது.).

பலவின்பால்

, , என்பன பலவின்பாலை உணர்த்தும்
எ.கா:
ஓடி, மேய்ந்த, உண்ணா, திண்ணா, உண்கு, தின்கு

Remove ads

ஈறுகள் பொருந்தாத பெயர் சொற்கள்

பெயர்ச் சொற்களில் வரும். ஈறுகளில் சில பொருந்தா
எ.கா:

மக்கள் - ள் ஈறு பெற்றாலும் பெண்பாலைக் குறிக்காது.

அலவன்(நண்டு) - ன் ஈறு பெற்றாலும் ஆண்பாலைக் குறிக்காது.

தாயார், தாய்மார் - அர், ஆர் ஈறு பெற்றாலும் பலர்பாலைக் குறிக்காது.

பேடியும் தெய்வமும்

பால் வகையில் அடங்காத ஆண்தன்மை திரிந்த உயர்திணைக்கும், பெண்தன்மை திரிந்த உயர்திணைக்கும் தனியே ஈறு கிடையாது அதுபோல திணை யில் அடங்காத தெய்வத்துக்கும் தனியே ஈறு கிடையாது

மேற்கோள்

தொல்காப்பியம் . சொல்லதிகாரம். கிளவியாக்கம்-சேனாவரையம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads