பாவம் (பரதநாட்டியம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாவம் அல்லது பாவனை என்பது பரத நாட்டியத்தில் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை உடலுறுப்புகளாலும், முகத்தாலும், வாக்கினாலும் வெளிப்படுத்துவதாகும். உடலில் உண்டாகும் எட்டு நிலைகளை பாவம் என்று விவரிக்கின்றார். அவை மெய்சிலிர்த்தல், கண்ணீர் விடுதல், முகத்தின் வண்ணம் மாறுதல், ஸ்தம்பித்தல், வியர்த்தல், நடுங்குதல், குரல் மாறுதல், மயங்கி வீழ்தல் ஆகியவையாகும்.

அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். இது நவரசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன:

  • ஸ்ருங்காரம் (வெட்கம்)
  • வீரம்
  • கருணை
  • அற்புதம்
  • ஹாஸ்யம்(சிரிப்பு)
  • பயானகம் (பயம்)
  • பீபல்சம் (அருவருப்பு)
  • ரெளத்ரம் (கோபம்)
  • சாந்தம் (அமைதி)


Remove ads

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads