பாஹ்லிகதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாஹ்லிகதேசம் சரசுவதி நதிக்கும், விபாசா நதிக்கும் நடுவில் இமய மலையின் தெற்குபாக அடிப்பொடர் முதல் வெகு தூரம் தெற்கு, வடக்காய் நீண்டு மத்சயதேசத்திற்கு வடக்கு எல்லை வரை பரவி இருந்த தேசம்.[1]
![]() | This article needs more links to other articles to help integrate it into the encyclopedia. (சூன் 2016) |

இருப்பிடம்
இந்த தேசமானது, காம்போச தேசத்தின் தெற்குபாகத்தில் சில பகுதிகளையும், இமயமலையின் மேல் சிந்துநதி ஓடும் பாகத்தையும், கிராத தேசத்தின் கிழக்கு எல்லை வரையிலும், பரவி இருக்கிற தேசம்.[2]
பருவ நிலை
பாஹ்லிகதேசத்திற்கு வடக்கு பாகத்தில் மாஹிகம், சகிகம், தால்வி என்று உபதேசங்கள் உண்டு, இவைகள் குளிர், மழை விடாமல் மாதம் மும்மாரி மழை பெய்துகொண்டே இருக்கும். கேகயம், பாஹ்லிகம், மாத்ரம், காந்தாரம் முதலான தேசங்களில் நல்ல வெயில் தோன்றும் ஆனால் வெய்யிலை ஒருவரும் காணமுடியாது.
மலை, காடு, மிருகங்கள்
இந்த தேசத்தின் வடக்கில் உள்ள ஒரு பெரிய குன்றும், அருணகிரி என்று பெரிய மலையும், சதத்ரு நதியின் கரையோரமாய் வடக்கில் கொஞ்சம் நீண்டு இருக்கிறது. இதன் நடுவில் கொஞ்சம் இடைவெளியுண்டு, இதில் சிறிய காடுகளும், அவைகளில் கருங்குரங்கு, பெரிய மலைப்பாம்பு, கரடி ஆகிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் பூமிவளம் மிகவும் நன்மையானபடியால் கொடிய மிருகங்கள் அதிகம் இம்மலைகளில் இல்லை.
நதிகள்
இந்த தேசத்தின் தெற்குமுனையில் செழிப்பான பகுதியில் விபாசா நதியும், வடகிழக்குப் பாகத்தில் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் பனி உருகி புதிய நதிகளும், மகாநதியுடன் சேருகிறது. இந்த தேசத்திற்கும், திரிகர்த்ததேசத்திற்கும், கேகய தேசத்திற்கும் எல்லையாக சென்று வநாயு தேசத்தின் சமீபத்தில் சிந்து நதியுடன் இணைகிறது.
விளைபொருள்
இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
சான்றடைவு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads