பிம்பிசாரன்
மகத நாட்டின் அரசன். From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிம்பிசாரன் (சமஸ்கிருதம்: बिम्भिसार, கிமு 558 - [[கி 491) மகத நாட்டை கிமு 543 முதல் தன் இறுதி வரை ஆண்ட ஹரியங்கா வம்சத்தை சார்ந்த ஒரு அரசன்.[1] இவருடைய மகன் அஜாதசத்ரு ஆவார். இவர் கௌதம புத்தரின் சீடர்களில் ஒருவர்.[2]

Remove ads
வாழ்க்கை
பௌத்த ஜாதக கதைகளில் இவரைப்பற்றி அறியக்கிடைக்கின்றன. இவர்புத்தரின் சமகாலத்தவர். இவர் அங்கதத்தை வென்று சம்பாவை தலைநகராகக் கொண்டு தன் மகன் அஜாத சத்ருவை ஆளச்செய்தார். புத்தர் ஞானம் பெறுவதற்குமுன் ஒரு முறை அவரை சந்தித்துள்ளார். புத்தர் ஞானம் பெற்ற பின் அவரின் முக்கிய சீடர்களில் ஒருவரானார். பௌத்தத்தில் ஒரு நிலையான சோத்பன்னத்தை அடையப்பெற்றதாக கூறப்படுகிறது.
சமண சமயக் குறிப்புகளில், இவரை ராஜகிரகத்தின் அரசன் ஷ்ரேனிக் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Remove ads
திருமணங்கள்
இவர் அரசுகளுக்கிடையே தனது நிலையை திடப்படுத்தவே தனது திருமணங்களைப் பயன்படுத்தியுள்ளார். இவரது முதல் மனைவி கோசல நாட்டின் அரசனின் மகளும் பசேனதியின் தங்கையுமாவாள். இத்திருமணத்தின் மூலம், காசியை வரதட்சினையாகப்பெற்றார். இத்திருமணத்தின் மூலம் கோசலத்திற்கும் மகதத்திற்குமான பகை முடிவுக்கு வந்தது மட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கிடையேயான உறவை தன்னிச்சைப்படி முடிவெடுக்கும் வசதியையும் பெற்றார். இவரது இரண்டாம் மனைவி லிச்சாவி வம்சத்தைச்சார்ந்த வைசாலி நாட்டைச்சார்ந்த செல்லனா ஆவாள். இவரது மூன்றாம் மனைவி கேமா, பஞ்சாபைச் சார்ந்த மத்திர நாட்டு மன்னர் மகளாவாள்.
Remove ads
மறைவு
வரலாற்றின்படி பிம்பிசாரன் தனது மகன் அஜாத சத்ருவினால் சிறைப்பிடிக்கப்பட்டு பசியினால் வாடி உயிர்நீத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வு கிமு 491 வாக்கில் நடந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
