பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிம்பிரி சிஞ்ச்வாட் மாநகராட்சி (Pimpri Chinchwad Municipal Corporation) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தில் உள்ள ஹவேலி தாலுகா மற்றும புனே மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாநகராட்சி பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகரத்தின் மேம்பாடு நிர்வாகத்தை மேற்கொள்கிறது.
ஹவேலி தாலுகாவின் பிம்பிரி, சிஞ்ச்வடு, அகுர்தி, வாகட் மற்றும் போசரி போன்ற தொழிற்சாலைப் பகுதிகளைக் கொண்டு, 11 அக்டோபர் 1982-இல் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி நிறுவப்பட்டது. இம்மாநகராட்சி 181 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1.72 மில்லியன் மக்கள்தொகையும் கொண்டது.[7][8]
Remove ads
நிர்வாகம்
இம்மாநகராட்சியின் அன்றாட நிர்வாகம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியின் தலைமையில் நடைபெறுகிறது. இம்மாநகராட்சி மன்றக் குழு மேயர் மற்றும் துணை மேயர் தலைமையிலான 128 வார்டு உறுப்பினர்களைக் கொண்டது.
வரலாறு
புனே நகரத்தின் புறநகர்கள் பகுதிகளான பிம்பிரி, சிஞ்ச்வடு, அகுர்தி மற்றும் போசரி பகுதிகளைக் கொண்டு 1970-இல் பிம்பிரி-சிஞ்ச்வடு நகராட்சி நிறுவப்பட்டது. 11 அக்டோபர் 1982-இல் இந்நகராட்சியின் சாங்கவி, பிம்பிளே குரவ், கசர்வடி, பிம்பளே சௌதாகர், பிம்பிளே நீலக், ரகாதன், தேர்காவ், வாகட் போன்ற சுற்றுப்பகுதிகளைக் கொண்டு பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. [9] 1997-இல் போசரி, நிக்டி போன்ற 18 கிராமப்புற பகுதிகள் இம்மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறது, இதன் பரப்பளவு 181 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக உயர்ந்துள்ளது.
Remove ads
இதனையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads