பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி

சமசுகிருத அறிஞர், வெங்கடேச சுப்ரபாதம் இயற்றியவர் From Wikipedia, the free encyclopedia

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி
Remove ads

பிரதிவாதி பயங்கரம் அண்ணன் (Prathivadhi Bhayankaram Annan) வைணவ சமய குருவும், தமிழ் மற்றும் சமசுகிருத மொழி அறிஞரும் ஆவார். இவர் சமசுகிருத மொழியில் இயற்றிய வெங்கடேச சுப்ரபாதம் இசைச் செய்யுள், திருப்பள்ளியெழுச்சியின் போது திருமலை உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்றளவும் பாடப்படுகிறது.[1][2][3]

பிரதிவாதி பயங்கரம் அண்ணன் இயற்றிய வெங்கடேச சுப்ரபாதத்தின் தமிழ் வடிவம்; எம். எஸ். சுப்புலட்சுமி குரலில் ஒலிக்கீற்று
விரைவான உண்மைகள் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி, பிறப்பு ...

பிரதிவாதி பயங்கரம் அண்ணன், கி பி 1361இல் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஹஸ்திகிரிநாதர் ஆகும். மணவாளமாமுனிகளின் நேரடிச் சீடராக இருந்தவர். இவர் இராமானுசர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபதிகளில் (இராமானுசர் தேர்ந்தெடுக்கப்பட்ட 74 சிறப்புச் சீடர்கள்) ஒருவரான முடும்பை நம்பி என்பவரின் வம்சத்தில் பிறந்தவர் என்று நம்பப்படுகிறது.[4]

வைண சமயத்தை வளர்ப்பதற்காக இராமானுசர் நியமித்த 74 சிம்மாசனாதிகளில் ஒருவரான முடும்பை நம்பியின் வழித்தோன்றலில் பிறந்தவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன்.[5] பின்னர் வேதாத தேசிகரின் மகன் நயன வரதாச்சாரியின் சீடராக மாறியவர். இவர் புகழ் பெற்ற வைணவ ஆன்மிகச் சொற்பொழிவாளரும், எழுத்தாளுரும், புலவரும், விளக்க உரையாசிரியரும் ஆவார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads