பிரமோத் சாவந்த்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரமோத் சாவந்த் (Pramod Sawant)(பிறப்பு: 24 ஏப்ரல் 1973) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், கோவா மாநிலத்தின் 13ஆவது (தற்போதைய) முதலமைச்சரும் ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.[2]

விரைவான உண்மைகள் பிரமோத் சாவந்த், 13ஆவது கோவா முதலமைச்சர் ...
Remove ads

இளமைக் காலம்

இவர் ஏப்ரல் 24, 1973 ஆண்டு பாண்டுரங் - பத்மினி சாவந்த் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[3][4] இவர் கோலாப்பூரில் உள்ள கங்கா ஆயுர்வேதி மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறையில் பட்டம் பெற்றார். பின்னர் புனேவில் உள்ள திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார்.

இவரது மனைவி சுலக்சனா சவான்ட் ஆவார்.[5] இவர் பிக்கோலிம் நகரில் உள்ள ஶ்ரீ சாந்ததுர்கா மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக உள்ளார்.[6]

Remove ads

அரசியல் வாழ்க்கை

சாவந்த் கோவா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள சான்கியூலிம் தொகுதியிலிருந்து கோவ சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

கோவா முதலமைச்சராக

  • கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்குப் பிறகு, கோவா முதல்வர் பதவிக்கு, பிரமோத் சாவந்த் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கோவாவின் 13வது முதலமைச்சராக 19 மார்ச் 2019 அன்று பதவியேற்றார்.[7][8][9]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads