பிரம்மச்சர்யம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரம்மச்சரியம் மனித வாழ்வில் முதல் நிலையாகும். இது தன்னடக்க நிலை அல்லது மாணவப் பருவமாகும். ஆசிரியர்களுக்குக் கட்டுபட்டு அவர்களுக்கு பணிவிடைகளை செய்து பயின்று சமயச் சடங்குகளை செய்து நன்னடத்தை உடையவராய் திகழும் மாணவப் பருவமே பிரம்மச்சரியம்.

முதல் நிலையான பிரம்மச்சரியத்தில் மாணவனுக்கு (சீடனுக்கு) பணிவு, மன அடக்கம், புலனடக்கம் கொண்ட பருவம். குரு குல மாணவன் எத்தகைய இன்பங்களிலும் ஈடுபடகூடாது. குருவின் இல்லத்திலேயே இருந்து வேதங்களையும், வேதாங்தங்களையும் மற்றும் உபவேதங்களையும் கற்றுக் கொள்கிறான்.[1] அவன் தன் குருமார்களுக்கு தொண்டு செய்வதில் தானகவே ஈடுபடுகிறான். மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் தட்சணையை குருதேவருக்கு தட்சணை வழங்கி விடைபெறுகிறான். குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்த ஆசிரமமான கிரகஸ்தம் செல்ல ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads