பிரம்மாஸ்திரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரம்மாஸ்திரம் என்பது இந்து தொன்மவியலில் வலிமைமிக்க ஆயுதமாக சொல்லப்படுவதாகும். இந்த ஆயுதம் படைப்பின் கடவுளான பிரம்மனை நோக்கி தவமிருந்து பெறுவதாகவும் நம்பப்படுகிறது. இந்த வகை ஆயுதமானது எய்யும் நபர்கள் மந்திரங்களை உச்சரித்து சாதாரண அம்பினை பிரம்மாஸ்திரமாக மாற்றி எய்வதாகவும், தர்பை புல்லைக் கூட பிரம்மாஸ்திர மந்திரத்தினால் பிரம்மாஸ்திரமாக மாற்றாலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
புராணங்களில் பிரம்மாஸ்திரம்
இராவணனின் மகன் அதிகாயனை இலக்குமணன் பிரம்மாஸ்திரம் எய்தி கொன்றதாக இராமாயணம் கூறுகிறது. அத்துடன் இராவணனின் மகனான இந்திரஜித் பிரம்மாஸ்திரம் எய்து அனுமனை கட்டுட்டு இராவண சபைக்கு கொண்டுவந்ததாகவும் இராமாயணம் கூறுகிறது.[1]
மகாபாரத இதிகாசத்தில், குருச்சேத்திரப் போரின் இறுதியில் அசுவத்தாமன், அபிமன்யு மனைவியின் கருப்பையில் குடியிருந்த, பாண்டவர்களின் குலக்கொழந்தான பரிட்சித்துவை கொல்ல வேண்டி பிரம்மாஸ்திரத்தை செலுத்தினான்.
பிரம்மாஸ்திரத்தை செலுத்த தெரிந்தவர்கள், அதனை மீண்டும் திருப்பி அழைக்கும் மந்திரம் தெரிந்திருக்க வேண்டும். அருச்சுனனுக்கு தெரிந்த இம்மந்திரம், அசுவத்தாமனுக்கு தெரியாத காரணத்தினால், தனது நெற்றியில் இருந்த மணியை இழந்தான்.
Remove ads
கருவி நூல்
- இராமாயணம்
- மகாபாரதம்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads