பிரம்ம ராக்கதன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரம்ம ராக்கதன் (Brahmarakshasa) [1][2]என்பது இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் ஒரு இராட்சத ஆன்மாவாகும்.

விளக்கம்

பிரம்ம ராக்கதன் என்பது உண்மையில் ஒரு பிராமணரின் ஆவி ஆகும். அவர் உயர் குடியில் பிறந்து இறந்த அறிஞர். அவர் தனது வாழ்க்கையில் தீய காரியங்களைச் செய்தவன். அறிவைத் தவறாகப் பயன்படுத்தியவன். இப்படிப்பட்ட பெண்ணோ ஆணோ அவரின் இறப்புக்கு பிறகு ஒரு 'பிரம்மா ராட்சதராக கஷ்டப்பட வேண்டியவர் ஆவார். அறிஞரின் பூமிக்குட்பட்ட கடமைகள் செய்யாமல் தவறி, நல்ல மாணவர்களின் அறிவை சிதறடிப்பது குற்றமாகும். அவர் அவ்வாறு செய்தவன் மரணத்திற்குப் பிறகு ஒரு பிரம்ம ராட்சதனாக மாறுவான், இது மிகவும் கடுமையானஆவி. .[3][4] பிரம்ம ராட்சதன் என்ற சொல்லுக்கு பிராமணர் மற்றும் அரக்கன் என்று பொருள். பண்டைய இந்து நூல்களின்படி, அவர்கள் சக்திவாய்ந்த அரக்கர்கள் ஆவர். அவர்கள் நிறைய சக்திகளைக் கொண்டவர்கள், இந்த உலகில் மிகச் சிலரே அவர்களுடன் சண்டையிட முடியும் . அவர்கள் அதிகமாக வரமும் அல்லது இந்த வாழ்க்கை வடிவத்திலிருந்து அவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கவும் முடியும். அவர்கள் இன்னும் அதன் உயர் மட்ட கற்றலைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும். ஆனால் அவர்கள் மனிதர்களை உண்ணுபவர்கள். அவர்களின் கடந்தகால வாழ்க்கை மற்றும் வேதங்கள் மற்றும் புராணங்கள் பற்றிய அறிவு அவர்களுக்கு உண்டு. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் பிராமணர் மற்றும் ராட்சதர்கள் ஆகிய இருவரின் குணங்களையும் கொண்டுள்ளனர்.

Remove ads

இந்து புராணங்களில்

7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சமஸ்கிருத கவிஞர் மயூர்பட்டா எழுதிய, புகழ்பெற்ற சூர்ய சதகம் (சூரியனைப் புகழ்ந்த நூறு வசன கவிதைகள்) உருவாக்க முயன்றார். ஆனால், அவர் பிரம்மராட்சதரால் கலக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவுரங்காபாத் மாவட்டம், பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தியோ சூரியக்கோயிலிலி அவர் தவம் செய்து கொண்டிருந்தார். பிரம்மராட்சதர்கள் அரச மரத்தில் வசித்து வந்தனர். அந்த மரத்தினடியில் மயூர்பட்டா தவம் செய்து வசனங்களை உருவாக்கிக்கொண்டிருந்தார். பிரம்மராட்சர்கள் மயூர்பட்டா உச்சரித்த வசனங்களை மீண்டும் மீண்டும் கூறி அவரைத் தொந்தரவு செய்தனர். அவர்களை தோற்கடிப்பதற்காக மயூர்பட்டா மூக்கு வழியாக வார்த்தைகளை உச்சரிக்கத் தொடங்கினார். பிரம்மராட்சர்கள் அல்லது பிற ஆவிகளுக்கு மூக்கு இல்லாததால், மயூர்பட்டாவால் தோற்கடிக்கப்பட்டு மரத்தை விட்டு வெளியேறினர். உடனடியாக செயலிழந்து போயினர். ஆவி மயுர்பட்டாவை விட்டு வெளியேறிய பிறகு சூரியனைப் புகழ்ந்து நூறு வசனங்களை அமைதியாக உருவாக்க முடிந்தது. இது அவரை தொழுநோய் என்ற வியாதியிலிருந்து குணப்படுத்தியது.

Remove ads

கதைகளில்

பழைய இந்திய கதைகளில் பிரம்ம ராட்சசர்கள் வழக்கமான அம்சமாக இருந்தனர். இந்திய கதைகளில் பிரம்ம ராட்சதர்கள் மகிழ்ச்சி அடைந்தால் எந்தவொரு நபருக்கும் கேட்கும் வரம், பணம், தங்கம் ஆகியவற்றை வழங்குவதற்கும் சக்திவாய்ந்தவையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கதைகளில், அவை ராட்சதர்களைப் போல தலையில் இரண்டு கொம்புகள் மற்றும் ஒரு பிராமணர் போன்ற குடுமியானது தலையில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். ஒரு சில கதைகளில் பிரம்மா ராட்சதங்கள் சில சமயங்களில் மனிதர்களை சாப்பிடுபவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

கோயில்கள்

பல இந்து கோவில்களில், குறிப்பாக மத்திய இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மற்றும் கர்நாடகா போன்ற தென்னிந்தியாவில் வெளிப்புறச் சுவர்களில் பிரம்ம ராட்சதர்களின் சிலைகளை நாம் காணலாம். இவர்களுக்கும் பொதுவான பூஜை நடைபெறுகிறது. பூசை மரியாதையானது; ஒரு எண்ணெய் விளக்கு அவர்களின் சிலைகளுக்கு முன்னால் வழக்கமான முறையில் எரிகிறது. பல கோயில்களில் இதன் சிலைகள் உள்ளன, அங்கு அவை அரக்க கடவுள்களாகவும் வழிபடப்படுகின்றன. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில், கட்டுமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன் பிரம்மா ராட்சதர்களிடமிருந்து அனுமதி பெறுவது வழக்கம்.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads