பிரம்ம தாண்டவம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிரம்ம தாண்டவம் அல்லது பிரம தாண்டவம் என்பது சிவபெருமானின் எண்ணற்ற சிவதாண்டவங்களில் ஒன்றாகும். இந்த தாண்டவம் பஞ்ச தாண்டவங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. [1]

திருமுருகன் பூண்டியிலும், திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயிலில் பிரம தாண்டவ தரிசனத்தினைக் காணலாம். [2]

தாண்டவக் காரணம்

சிவபெருமானிடம் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் ஆனந்த தாண்டவம் ஆடிட வேண்டினர். அதனால் சிவபெருமானும் அம்முனிவர்களுக்காக ஆனந்த நடனம் ஆடினார். இதனை அறிந்த துர்வாச முனிவர், தனக்கும் சிவபெருமான் நடன தரிசனம் தரவேண்டும் என எண்ணினார். அதற்காக திருக்களர் வந்த துர்வாசர், அங்கிருந்த வனத்தினை பாரிஜாத வனமாக மாற்றி, இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்து பூசித்து வந்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் பிரமதாண்டவ தரிசனத்தினை துர்வாருக்கு தந்தருளினார்.

Remove ads

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads