பிரவிந்த் ஜக்நாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரவீந்த்குமார் ஜக்னாத் (Pravind Kumar Jugnauth) (பிறப்பு: 1961 திசம்பர் 25) இவர் ஓர் மொரிசிய அரசியல்வாதி ஆவார். இவர் மொரிசியசின் பிரதமராக இருக்கிறார். ஏப்ரல் 2003 முதல் இவர் போர்க்குணமிக்க சோசலிச இயக்கம் கட்சியின் தலைவராக இருந்தார். [1] இவர் பல அமைச்சங்களில் பதவி வகித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். [2] [3]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
மொரிசியசின் வகோஸ்-பீனிக்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான லா கேவர்னில் 1961 திசம்பர் 25 அன்று பிறந்த இவர், அகிர் (யாதவர்) சாதியைச் சேர்ந்த ஒரு இந்துக் குடும்பத்தில், ஒரு வழக்கறிஞரான அனெரூட் ஜக்நாத்துக்கும், பள்ளி ஆசிரியரான சரோஜினி பல்லா என்பவருக்கும் பிறந்தார். இவருக்கு சாலினி ஜக்நாத்-மல்கோத்ரா என்ற மூத்த சகோதரி உள்ளார். [4]
ஆரிய வேத இந்து ஆரம்பப் பள்ளிக்குப் பிறகு, பேரரசின் கல்லூரி க்யூரிபிப்பில் படித்தார். பின்னர் இவர் பக்கிங்காம் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இதற்காக லிங்கனின் விடுதியில் சேர்ந்து ஒரு வழக்கறினரானார். பின்னர் இவர் பிரான்சில் உள்ள ஐக்ஸ்-மார்சேய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் "டிப்ளமோ என் டிராய்ட் சிவில்" பட்டம் பெற்றார் .
Remove ads
குடும்ப வாழ்க்கை
இவர் 1992 இல் கோபிதா ராம்தானே என்பவரை மணந்தார், சோனிகா, சோனாலி , சாரா என்ற மூன்று மகள்கள் இவருக்கு இருந்தனர்.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads