பிரான்ஸ் பேர்டினண்ட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரான்ஸ் பேர்டினண்ட் (Franz Ferdinand; டிசம்பர் 18, 1863 – ஜூன் 28, 1914) ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசரும், ஹங்கேரி, மற்றும் பொஹேமியாவின் இளவரசரும் ஆவார். அத்துடன் 1896 முதல் இறக்கும் வரையில் ஆஸ்திரிய-ஹங்கேரியின் பட்டத்துக்கு உரியவரும் ஆவார்[1]. ஜூன் 28, 1914 இல் சரயேவோவில் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டிருக்கையில் அங்கு இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வே ஆஸ்திரிய-ஹங்கேரி அரசு சேர்பியாவின் மீது போரை அறிவிக்க காரணம் ஆகும். இதனை அடுத்து ஆஸ்திரிய-ஹங்கேரியுடன் கூட்டணியாக இருந்த ஜெர்மனி, ஒட்டோமான் பேரரசு, பல்கேரியா ஆகிய நாடுகள் சேர்பியாவுடன் நட்பில் இருந்த நாடுகளுடன் (நேச நாடுகள்) போரை ஆரம்பித்தன. இது முதலாம் உலகப் போருக்கு வழி வகுத்தது[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads