பிரிமிடின்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரிமிடின் (Pyrimidine) ஒரு நறுமணமுள்ள பல்லினவட்ட கரிமச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: C4H4N2. இது, பிரிடின் மற்றும் பென்சீனைப் போன்று ஆறுருப்பு வளையத்தினைக் கொண்டது: இரண்டு நைட்ரசன் அணுக்களை ஒன்று மற்றும் மூன்றாம் நிலைகளில் கொண்டுள்ளது[2]. பிரிமிடின், டைஅசைனின் இரண்டு வேறு வடிவங்களுடன் மாற்றியனாக உள்ளது: முதலாவது பிரிடசின், இரண்டு நைட்ரசன் அணுக்களை ஒன்று மற்றும் இரண்டாம் நிலைகளில் கொண்டுள்ளது; இரண்டாவது பிரசின், இரண்டு நைட்ரசன் அணுக்களை ஒன்று மற்றும் நான்காம் நிலைகளில் கொண்டுள்ளது.
Remove ads
உட்கரு அமில மூலங்கள் (நியூக்ளியோடைடுகள்)
உட்கரு அமிலங்களிலுள்ள மூன்று உட்கரு அடித்தளங்களான சைடோசின் (C), தைமின் (T), யுராசில் (U) ஆகியன பிரிமிடினின் கிளைப்பொருள்களாகும்:
டிஆக்சி ரைபோநியூக்கிளிக் அமிலம் (டி.என்.ஏ.) மற்றும் ரைபோநியூக்ளிக் அமிலங்களில் (ஆர்.என்.ஏ) உள்ள உட்கரு அடித்தளங்கள் எதிர்நிரப்பு பியூரின்களுடன் ஹைட்ரசன் பிணைப்புகளை உருவாக்குகின்றன. டி.என்.ஏ.-வில் பியூரின்களான அடெனின் (A) மற்றும் குவானின் (G), பிரிமிடின்களான தைமின் (T) மற்றும் சைடோசினுடன் (C) முறையே பிணைகின்றன.
ஆர்.என்.ஏ.-வில் அடெனினின் (A) எதிர்நிரப்பு, தைமினுக்குப் (T) பதிலாக யுராசில் (U) ஆகும். எனவே, கீழ்வரும் பிணைகள் உருவாகின்றன: அடெனின்:யுராசில் மற்றும் குவானின்:சைடோசின்.
மிக அரிதாக, தைமின் ஆர்.என்.ஏ.- விலும், யுராசில் டி.என்.ஏ.-விலும் காணப்படுகிறது. உட்கரு அமிலங்களில் மேலே குறிப்பிட்ட மூன்று பெரிய பிரிமிடின் அடித்தளங்களைத் தவிர, சில சிறிய பிரிமிடின் அடித்தளங்களும் காணப்படுகின்றன. இச்சிறு பிரிமிடின்கள், பெரிய பிரிமிடின்களின் மீத்தைலாக்கப்பட்ட வடிவங்களாகும். இவை ஒழுங்காற்று பணிகளில் ஈடுபடுவதாக கருதப்படுகின்றது[3].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads