பிரிவோம் சந்திப்போம்
கரு பழனியப்பன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரிவோம் சந்திப்போம் கரு பழனியப்பன் இயக்கத்தில் சேரன், சினேகா முக்கிய வேடங்களில் நடிக்க 2008 ஆம் ஆண்டு ஜனவரி 14 வெளியான தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடியில் உள்ள நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தின் கூட்டுக் குடும்பம் ஒன்றில் புதிதாக மணமானவர் இருவரின் கதையை இப்படம் சித்திரிக்கிறது.[1][2]
Remove ads
கதைச்சுருக்கம்
இக்கதை சாலாவைச்(சினேகா) சுற்றி பின்னப்பட்டுள்ளது. தனது வீட்டில் ஒரே பிள்ளையான சாலா பட்டப்படிப்பை முடித்து கூட்டுக்குடும்பம் ஒன்றில் வசிக்கும் ஒருவரை மணக்கிறார். கூட்டுக்குடும்பத்தில் இருந்துவிட்டு தனிக்குடித்தனம் போகும் சாலாவை தனிமை வாட்டுகிறது. இத்தனிமையைப் பயன்படுத்தி இயக்குநர் தமிழர் வாழ்வு முறைப்பற்றி விளக்குகிறார்.
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "குதூகலக் கூட்டுக் குடும்பத்தின் இனிமை நாடி வந்தவளை, தனிக் குடித்தனத் தனிமை வாட்டியெடுத்தால் என்ன ஆகும்? ... இது ... பிரியமான சந்திப்பு!" என்று எழுதி 43100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]
மேற்கோள்கள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads