பிருந்தாவனம் காதல் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காதல் கோயில் அல்லது பிரேம் மந்திர் (Prem Mandir) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் ஊரில் ராதை, கிருஷ்ணர், சீதை மற்றும் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இதனை ஜெகத் குரு கிருபாளு மகராஜ்[1][2] நடத்தும் தொண்டு நிறுவனத்தால் 17 பிப்ரவரி 2012 அன்று நிறுவப்பட்டது. இக்கோயில் மூலவர்கள் இராதா கிருஷ்ணன் மற்றும் சீதா-இராமர் ஆவார்.



இக்கோயில் வளாகம் பிருந்தாவனத்தின் புறநகரில் 55 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு தளங்கள் கொண்ட இக்கோயிலின் முதல் தளத்தில் இராதா கிருஷ்ணன் கோயிலும், இரண்டாம் தளத்தில் சீதை மற்றும் இராமருக்கான கோயிலும் உள்ளது.
இக்கோயில் மண்டபம் 73,000 சதுர அடி பரப்பளவில் தூண்கள் இன்றி, குவிமாடம் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ஒரே நேரத்தில் 25,000 பக்தர்கள் அமர்ந்து வழிபட முடியும்.[3] இக்கோயிலை சுற்றிலும் அழகிய தோட்டங்கள், நீர் ஊற்றுகள், ராதை மற்றும் கோபியர்களுடன் கிருஷ்ணரின் ராசலீலைகள், கோவர்தன மலையைத் தூக்கும் காட்சி, காளிங்க நர்த்தனம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் துணைக் கோயிலான கீர்த்தி கோயில் பர்சானா எனும் ஊரில் 2019-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[4]மற்றொரு துணைக் கோயிலான பக்தி கோயில் 2015-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
Remove ads
திருவிழாக்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads