பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் அல்லது பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (French East India Company, French: La Compagnie française des Indes orientales அல்லது Compagnie française pour le commerce des Indes orientales) 1664ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் வணிக நிறுவனமாகும். இது குடியேற்றவாத இந்தியாவில் பிரித்தானிய, டச்சு கிழக்கிந்திய நிறுவனங்களுடன் போட்டியிட உருவாக்கப்பட்டதாகும்.



கிழக்கு உலகில் வணிக முயற்சிகளை மேற்கொள்ள ஜீன்-பாப்டிஸ்ட் கோல்பெர்ட்டால் திட்டமிடப்பட்டு பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரால் தனியுரிமை வழங்கப்பட்டதாகும். இதற்கு முன்னர் இயங்கிய மூன்று நிறுவனங்கள் - சீன நிறுவனம், கிழக்கு நிறுவனம், மடகாசுகர் நிறுவனம் இணைக்கப்பட்டு புதிய நிறுவனமாக நிறுவப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குநராக தெ பாயே இருந்தார். இவருக்குத் துணையாக சப்பானில் இருபதாண்டுகள் உட்பட, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் முப்பதாண்டுகள் பட்டறிவு கொண்ட பிரான்சுவா கரோன்[1] மற்றும் இசஃபகான், பெர்சியாவில் வணிகராக இருந்த மர்காரா அவான்சின்ட்சு [2] இயக்குனர்களாக இருந்தனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
நூலாதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads