பிரேசிலிய ஒலிம்பிக் குழு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரேசிலிய ஒலிம்பிக் குழு (Brazilian Olympic Committee), (Portuguese: Comitê Olímpico do Brasil – COB) பிரேசிலிய விளையாட்டுத் துறையில் மிக உயரிய அமைப்பாகும்; இது ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பிரேசிலின் பங்கேற்பை கட்டுப்படுத்துகின்றது. சூன் 8, 1914இல் நிறுவப்பட்டபோதும் இதன் அலுவல்முறையான செயற்பாடுகள் முதல் உலகப் போரால் தடைபட்டு 1935ஆம் ஆண்டுகளிலிருந்து செயல்படுகின்றது. துவக்கத்தில் இது பிரேசிலின் படகுவலிப்பு சங்கங்களின் கூட்டமைப்புத் தலைமையிடத்திலிருந்து செயல்பட்டது.
பி.ஒ.குழு பலவகைகளில் வருமானம் ஈட்டுகின்றது; முதன்மையான வருமானமாக பிரேசிலிய தேசிய குலுக்கல் பரிசுச் சீட்டு இலாபத்தில் 2% இதற்கு வழங்கப்படுகின்றது. இதன் தற்போதைய தலைவராக கார்லோசு ஆர்த்தர் நுசுமான் உள்ளார். இதன் முதன்மைத் திட்டமாக இரியோ டி செனீரோவில் நடக்கவிருக்கும் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் உள்ளன.[1]
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads