பிரேந்திர இலாக்ரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரேந்திர இலாக்ரா (Birendra Lakra) (பிறப்பு: 3 பிப்ரவரி 1990) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இலண்டனில் நடந்த 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் வளைதடிபந்தாட்டக் குழுவில் கலந்துகொண்டார்.[1] இவரது அண்ணன் பிமல் இந்தியா சார்பில் நடுக்கள ஆட்டக்காரராக விளையாடினார். இவரது தங்கை அசுந்தா இலாக்ரா இந்திய மகளிர் வளைதடிபந்தாட்டக் குழுவில் விளையாடித் தலைமையும் ஏற்றார்.[2]
Remove ads
இளமை
இவர் ஜார்க்காண்டு மாநிலத்தில் சிம்தேகா மாவட்டத்தில் 1990 பிப்ரவரி 3 இல் பிறந்தார். இவர் குரூக்கியரில் ஓரவான் இனக்குழுவில் பிறந்தார். இவரது குடும்பம் ஒடிசா அருகில் உள்ள ஜார்க்காண்டு மாநிலத்தில் நோங்கடா எனும் ஊரில் வாழ்ந்தது.
இந்திய வளைதடிப்பந்தாட்டக் குழு
இந்திய வளைதடிப்பந்தாட்டக் குழுவின் தொடக்க ஏலத்தில் இராஞ்சி குழுமம் இலாக்ராவை 41,000 அமெரிக்க டாலருக்கு எடுத்தது.[3] இவரது அடிப்படைக் கோரல் மதிப்பு 9,250 அமெரிக்க டாலராகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads