பிலிமோரா அதிவேக தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிலிமோரா அதிவேக தொடருந்து நிலையம் (Bilimora high-speed railway station) இந்தியாவின் மும்பை-அகமதாபாத் அதிவேக இரயில் பாதையில் கட்டப்பட்டு வரும் ஓர் இரயில் நிலையமாகும்.[1] இந்தியாவின் குசராத் மாநிலத்தில் பிலிமோராவிற்கு அருகிலுள்ள கேசாலி கிராமத்தில் இது அமைந்துள்ளது.[1] இந்த இரயில் நிலையம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது [2] நாட்டின் முதல் அதிவேக இரயில்வேயுடன் 2026 ஆம் ஆண்டுக்குள் பிலிமோரா நிலையம் செயல்படும்.[2]

விரைவான உண்மைகள் பிலிமோரா அதிவேக ரயில் நிலையம் Bilimora high-speed railway station, பொது தகவல்கள் ...
Remove ads

தடங்கள்

பிலிமோரா அதிவேக இரயில் நிலையம் மும்பை-அகமதாபாத் அதிவேக இரயில் வழித்தடத்தால் இயக்கப்படும். மேலும் மும்பையில் உள்ள மும்பை -அகமதாபாத் அதிவேக இரயில் பாதையின் அதிகாரப்பூர்வ தொடக்க இடத்திலிருந்து 217-300 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [3]

நிலைய அமைப்பு

பிலிமோரா அதிவேக ரயில் நிலையம் இரண்டு உயரமான எதிரெதிர் நடைமேடைகளைக் கொண்டிருக்கும். கட்டப்பட்ட நிலையக் கட்டிடம் நிலத்தடியில் அமையும். இரயில் நிலையத்தில் இரண்டு பக்க நடைமேடைகள், வழக்கமான சேவைக்காக 2 தடங்களில் சேவை செய்யும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads