பிளாக் விடோவ்

From Wikipedia, the free encyclopedia

பிளாக் விடோவ்
Remove ads

பிளாக் விடோவ் (கருப்பு விதவை) (ஆங்கிலம்: Black Widow) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரம் டேல்ஸ் ஆப் சஸ்பென்ஸ் (ஏப்ரல் 1964) இல் முதன்முறையாகத் தோன்றியது. இப்பாத்திரம் ஸ்டான் லீ, டான் ரிக்கோ, டான் ஹெக் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் பிளாக் விடோவ், வெளியீடு தகவல் ...

இவர் பாத்திரம் 2010 ஆம் ஆண்டில் அயன் மேன் 2 என்ற திரைப்படத்தில் அயன் மேனுக்கு எதிராக ஒரு ரஷ்யன் நாட்டு உளவாளியாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அவர் அமெரிக்காவின் கற்பனையான உளவு நிறுவனமான ஷீல்ட் உடன் இணைந்து அவென்ஜர்ஸ் என்ற மீநாயகன் அணியின் உறுப்பினர் ஆனார்.

பிளாக் விடோவ் என்ற கதாப்பாத்திரம் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்பவரால் சித்தரிக்கப்பட்டது. மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களான அயன் மேன் 2 (2010), தி அவேஞ்சர்ஸ் (2012), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), பிளாக் விடோவ் (2020) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Remove ads

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads