பிளேக்கின் கண்ணிமுடிச்சு

From Wikipedia, the free encyclopedia

பிளேக்கின் கண்ணிமுடிச்சு
Remove ads

பிளேக்கின் கண்ணிமுடிச்சு (Blake's hitch) என்பது ஒரு மரவளர்ப்பியலாளர்கள், மரம் ஏறுபவர்கள் போன்றோரால், மரங்களில் ஏறுவதற்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு உராய்வுக் கண்ணிமுடிச்சு ஆகும். இது ஒரு உறுதியான முடிச்சாக இருந்தபோதும், வழமையாக எட்டு வடிவ முடிச்சுப் போன்ற ஒரு தடை முடிச்சால் பாதுகாக்கப்படுவது உண்டு. மரங்களில் ஏறுதல் இறங்குதல் ஆகிய இரண்டுக்கும் பயன்படும் இந்த முடிச்சையே பிற முடிச்சுக்களிலும் கூடுதலாக மரவளர்ப்பாளர்கள் விரும்புகின்றனர்.

விரைவான உண்மைகள் பிளேக்கின் கண்ணிமுடிச்சு, வகை ...
Remove ads

வரலாறு

இம் முடிச்சுப் பற்றி எயின்சு புரோகாசுக்கா (Heinz Prohaska) என்பவரால் ஆசுத்திரிய வழிகாட்டிகளின் சஞ்சிகை ஒன்றில் 1981 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விபரங்களே இம் முடிச்சுப்பற்றி முதலில் வெளிவந்த விபரங்கள் ஆகும். தனியாக யேசன் பிளேக் (Jason Blake) என்பவரும் இம்முடிச்சைக் கண்டுபிடித்து "ஆபர் ஏஜ்" என்னும் மரவளர்ப்பியலாளர்களின் சஞ்சிகைக்கு எழுதிய கடிதம் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மரவளர்ப்பியலாளர்களால் மிகவும் ஆர்வமாக இதைப் பயன்படுத்தத் தொடங்கியதால் இம்முடிச்சு இதை அறிமுகப்படுத்தியவரின் பெயரைத் தழுவி "பிளேக்கின் கண்ணிமுடிச்சு" என இது அழைக்கப்பட்டது.

Remove ads

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads