பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பி.எஸ்.ஏ. கிருட்டிணய்யர் (1899-1953) சௌராட்டிரரால் நன்கறியப்பட்ட தலைவர்களுள் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கிருட்டிணய்யரின் தகப்பனார் பாதே. அனுமந்தய்யர், ஸ்ரீ நடனகோபாலநாயகி சுவாமிகளின் சீடர் ஆவர். மதுரை சௌராட்டிர மேல்நிலைப் பள்ளியின் நிர்வாகக் குழுவில் பல ஆண்டுகள் (1946-1952) கல்விப்புரவலராக இருந்தார். சௌராட்டிர மைய சபையின் தலைவராக இருந்தார். அழகர்கோவில் தேவஸ்தான அறங்காவலராக இருந்தவர். மதுரை சௌராட்டிர சபையின் தலைவராக இருந்தார். சமூகப்பணி, மொழி, இலக்கியம், கலாசார முன்னேற்றத்திற்கு ஒரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்தினார். பல ஊர்களில் சிதறிக் கிடந்த சௌராட்டிர மொழி, இலக்கிய ஏட்டுச் சுவடிகளையும் அரும்பொருட்களையும் சேகரித்தார். இதற்காக மதுரை சௌராட்டிர சபையில் அருங்காட்சியகம் மற்றும் சாகித்திய குழ நிறுவினார். வாலாசப்பேட்டை ஸ்ரீவேங்கடரமண பாகவதரின் வழித்தோன்றல்கள் பாதுகாத்து வந்த தியாகராஜர் மற்றும் வேங்கடரமணரின் பாதுகைகள், பூசை பாத்திரங்கள், சங்கீத, சோதிட, இலக்கிய, வைத்திய ஏட்டுச்சுவடிகள், தியாகராஜர் சுவாமிகள் பாராயணம் செய்த போதனா பாகவதம் முதலியவைகளை 1943ல் மதுரைக்குக் கொண்டுவந்து வரச் செய்தார். மதுரை சௌராட்டிர கிருஷ்ணன் கோயிலில் உள்ள ஸ்ரீதியாகராச வேங்கடரமண மந்திரத்தில் பாதுகைகளை வைத்துப் பூசை செய்ய தனி சந்நதி ஏற்படுத்தினார். இதனால் மதுரை சௌராட்டிர சபையின் புகழ் இசை உலகில் பரவியது. வாலாசாப்பேட்டை பொக்கிசத்திலிருந்த ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து நூலகள் அச்சடித்து வெளியிடும் பணியைத் துவக்கினார். முதலில் சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும் என்ற நூலை 1951ல் வெளியிட்டார். வேங்கட சூரி சுவாமிகள் சமற்கிருத மொழியில் இயற்றிய நெளகா வரலாற்று நூல் 1941ல் வெளியிட்டார். தான் பிறந்த ’பாதே’ குடும்பப் பெயர் பற்றி ’பதென்’ வம்சாவளி (Lineology of Bhathe Families) என்ற நூலை 1936ல் வெளியிட்டார்.

Remove ads

இவற்றையும் காண்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads