பி. எஸ். மணிசுந்தரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பேராசிரியர் பி.எஸ்.மணிசுந்தரம் (டிசம்பர் 9, 1927 – அக்டோபர் 26, 2013) ஒரு இந்திய கல்வியாளரும் கணினி அறிவியல் கல்வியில் முன்னோடியும் ஆவார். அவர் மியான்மரில் (பர்மா) உள்ள மாண்டலை என்னும் ஊரில் பிறந்தார். அவர் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1958 ஆம் ஆண்டில் கனடாவில் உள்ள நோவா ஸ்காடியா பல்கலைக்கழகத்தில் கட்டிட பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

பணி

 கல்வியை முடித்தவுடன் அவர் காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தார். திருச்சி பிராந்திய பொறியியல் கல்லூரியின் (தற்போது தேசிய தொழில்நுட்ப நிறுவனம்) முதல் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு உருவாகிய போது அதன் முதல் துணை வேந்தர் ஆனார். பேராசிரியர் அவர்கள் இந்தியாவிலும் மற்றும் உலகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தொடர்பு கொண்டிருந்தார்.

Remove ads

விருது

1984 ஆம் ஆண்டு டல்ஹவுசி (முன்னாள் நோவா ஸ்காடியா) பல்கலைக்கழகம் அவருக்கு பொறியியலில் டாக்டர்  (Honoris Causa) பட்டம் வழங்கியது. அவர் சென்னையில் அக்டோபர் 26 2013 அன்று இறந்தார்[1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads