பி. இராமச்சந்திர ரெட்டி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பி. இராமச்சந்திர ரெட்டி (24 நவம்பர் 1894 - 3 மார்ச் 1973) என்பவர் நீதிக்கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் சுதந்திரக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராவார். 1930 முதல் 1937 வரை தமிழ்நாடு சட்ட மேலவை தலைவராகப் பணியாற்றினார். இராமச்சந்திர ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி பெசவாடா கோபால ரெட்டியின் உறவினர் ஆவார். [1] இவர் 19 மார்ச் 1973 அன்று இறந்தார் [2]

விரைவான உண்மைகள் பி. இராமச்சந்திர ரெட்டி, நெல்லூர் மக்களவை உறுப்பினர் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

இராமச்சந்திர ரெட்டி 1894 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் நாள் சென்னை மாகாணத்தில் உள்ள புச்சிரெட்டிபாலத்தில் ஸ்ரீ சுப்பா ரெட்டி & கமலா (தோட்லா) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். [3] 1919 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அரசியலில் நுழைந்து நெல்லூர் மாவட்டக் கல்விக் குழுவின் தலைவராகச் சிறிது காலம் பணியாற்றினார். 1929 இல், அவர் மாவட்ட வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமணம்

அவர் தொட்லா சீதாவைத் திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றார். அக்குழந்தைக்கு அவரது தந்தை சுப்பா ரெட்டியின் பெயரிடப்பட்டது. முதல் மனைவி சீதா பிரசவத்திற்குப் பின் இறந்ததால் அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரி டோட்லா புஜ்ஜம்மாவை மணந்தார், அவர்களுக்கு 10 குழந்தைகள், 5 மகன்கள் மற்றும் 5 மகள்கள் பிறந்தனர்.

சட்ட சபையில்

இவர் இளம் வயதிலேயே நீதிக்கட்சியில் சேர்ந்து 1923 தேர்தலில் வெற்றி பெற்றார். [4] தொடர்ந்து 1926, 1930 மற்றும் 1934 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஜஸ்டிஸ் கட்சி மாகாண ஆட்சியைக் கைப்பற்றியபோது, இவர் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர் 6 நவம்பர் 1930 [5] முதல் மார்ச் 1937 வரை மெட்ராஸ் மேலவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1937 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.

பெரியார் தனது அரசியல் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றியபோது அவருடன் கருத்து வேறுபாடு கொண்டார். 1944 இல் நீதிக்கட்சி பிளவுபட்டவுடன் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இறுதியாக 1952 இல் கட்சியை விட்டு வெளியேறினார்

1952 இல், இவர் முதல் மக்களவைத் தேர்தலில் நெல்லூரில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1952 முதல் 1957 வரை மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

சுதந்திர கட்சி

ஜூன் 4, 1959 இல், சி. ராஜகோபாலாச்சாரி & என்.ஜி. ரங்கா மற்றும் பிற மூத்த அரசியல்வாதிகளுடன் இவர் சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். 1991 ஆம் ஆண்டு அதன் தாராளமயமாக்கல் கொள்கையைத் தொடங்கியபோது, அதன் சித்தாந்தம் நவீன இந்தியாவால் இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads