பீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு
பால்ட்டிக் செருமானிய வானியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீட்டர் கார்ல் உலூத்விக் சுவார்சு (Peter Carl Ludwig Schwarz,[1] 4 சூன் [யூ.நா. 23 மே] 1822 – 29 செப்டம்பர் [யூ.நா. 17 செப்டம்பர்] 1894)[2][1] (பரவலாக, உலூத்விக் சுவார்சு எனப்படுபவர்),[2] ஒரு பால்டிக்கு செருமானிய வானியலாளர் ஆவார்.[3] இவர் உருசிய புவித் தேட்டவியலாளரும் தோர்பத் பல்கலைக்கழக வானியல் பேராசிரியரும் ஆவார்.[1] [4] இவர் உருசியப் புவிப்பரப்பியல் கழகக் கான்சுடாண்டின் பதக்கம் பெற்றுள்ளார்[note 1][5] இவர் தெமிதோவ் பரிசும் பெற்றுள்ளார்[5][note 2] இது இவருக்கு 1865 இல் புனித பீட்டர்சுபர்கு, உருசிய அறிவியல் கல்விக்கழகத்தால் புவிப்புற அளக்கைப் பணிக்காக வழங்கப்பட்டது.[5]
Remove ads
காட்சியகம்
- தோர்பத் வான்காணகம். சுவார்சுவின் மாமனார் ஆகத்து மத்தியாசு ஏகன் வரைந்த வண்ண ஓவியம்.
- இராடே வார்புளர் (பிலோகோபசு சுவார்சு)
- உலூத்விக் சுவார்சு, 1870.
இவரது மனைவியான ஜூலி வில்கெல்மைன் ஏகன்-சுவார்சு வரைந்த வண்ண ஓவியம்.
பணிகள்
இடாய்ச்சு:
- Schwarz, Ludwig (1889); Eine Studie auf dem Gebiete der Practischen Astronomie; Dorpat.[6]
- [ஆங்கிலம்: A Study in the Field of Practical Astronomy].
- Schwarz, Ludwig (1887-1893); Beobachtungen, angestellt und herausgegeben von Ludwig Schwarz, Band 17-20; Kaiserliche Universitats-Sternwarte, Dorpat (Jurjew)[7][8]
- [ஆங்கிலம்: Observations made and published from Ludwig Schwarz, Volumes 17-20; Imperial University Observatory].
Remove ads
குறிப்புகள்
- இது அக்கழகத்தின் முதல் தலைவரான உருசியப் பெருமன்னர் கான்சுடாண்டின் நிகோலயேவிச் அவர்களின் பெயரில் வழங்கப்படுகிறது.
- இது நோபல் பரிசுக்கு முன்னோடி வழிகாட்டியாக விளங்கிய உருசியப் பரிசாகும்.
சான்றுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads