புஜங்க தாண்டவம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

புஜங்க தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த புஜங்க தாண்டவத்திலிருந்து உன்மத்த நடனம் தோன்றியுள்ளது. [1]

வேறு பெயர்கள்

நச்சம் - நச்சுகள் மிகுந்த பாம்புகளைக் கொண்டிய ஆடிய தாண்டவம்.[1] சுந்தர தாண்டவம்- அழகாக பாம்புகளை ஏந்தியபடி ஆடுதல்[1] பித்த நடனம் - வாசுகியின் விசத்தினை உட்கொண்டு ஆடியமையால், பித்த நடனம் என்று வழங்கப்படுகிறது.[1]

தாண்டவக் காரணம்

அமிழ்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அதில் மத்தாக மேரு மலையும், கயிறாக வாசுகி பாம்பும் பயன்படுத்தப்பட்டது. கடையும் பொழுது ஏற்பட்ட வலியினால் வாசுகி பாம்பு ஆலகாலம் எனும் விசத்தினை கக்கியது. அப்பொழுது தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தங்களை காக்கும் படி வேண்டினர். அப்பொழுது சிவபெருமான் ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என்பதாகும். அதன் பின் விசத்தினை அருந்தி அனைவரையும் சிவபெருமான் காத்தார். இந்த தாண்டவம் நவ ராத்திரியின் ஐந்தாம் நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது. [2]

Remove ads

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads